பக்கம் எண் :

பக்கம் :156பூங்கொடி

 
  துன்றுநல் லன்பால் தூயவள் வருகையை
விழைந்தன ராகி விடுத்தனர் ஓலை;
 
  குழைந்துளம் உருகிஅக் குலக்கொடி இயைந்து 160
     
 

மாளிகைக் காட்சி

 
     
  வருவோள் நீளுயர் மாமதில் வாயில்
மருவா நின்றவ் வழியுட் புகுமவள்
பட்டின் இயன்ற பசும்படாம் போர்த்தென
வெட்டுறும் பசும்புல் விரிதரை கண்டும்,
 
  புற்றரை அதனிடைப் பொலிவுற விளங்கிடும் 165
  சிற்றுளி வல்லான் செய்வினை முற்றிய
கற்சிலை ஆங்காங்கு அமைந்தன கண்டும்,
காண்பார் மருளக் கைவலான் இயற்றிய
மாண்பார் சுதையின் பாவைகள் கண்டும்;
 
  எழுப்பிய சுவரென எண்ணிட இருபுறம் 170
  செழித்தவை ஒழுங்குறத் தறித்திடும் செடிகள்
வரிசையின் அமைந்த வனப்பினைக் கண்டும்;
சுரும்பினம் விரும்பா அரும்புகள் மிடைந்திட
நரம்பின் இசைஎன முரலும் வண்டினம்
 
  முந்துற மொய்த்து நறுந்தேன் முகக்கப் 175
  பந்தியின் அமைந்த பல்வகை மலர்கள்
வியன்மணம் பரப்பி விரிந்துள கண்டும்;
கயல்மீன் பிறழ்ந்து கள்ளவிழ் மலர்மிசைத்
துயிலுவ தென்னக் கிடந்துபின் துள்ளிப்
 
  புனலிடை மீண்டும் புகுந்து திரியும் 180
  செய்குள மாகிய பொய்கை கண்டும்
நெய்யும் வினைஞர் நேர்த்தியின் இழைத்த
நூலின் இழையினும் நுண்கொடி படர்ந்து
நாலும் பந்தரின் நன்னலங் கண்டும்,
 

---------------------------------------------------------------

  கைவலான் - வல்லவன், தறித்திடும் - வெட்டிவிடப்பட்ட, முரலும் - ஒலிக்கும், நாலும் - தொங்கும்.