|
| தன்மனம் முகிழ்த்த தணியாக் காதலை எவ்வணம் மறைத்தனள், இளையோள் வியப்பே;' இவ்வணம் நினைந்துளங் கவ்விய மகிழ்வால் | |
| உட்புகுந் தாங்கண் ஒருத்தியைக் கண்டனன் | 155 |
| வெட்கினன் வியர்த்தனன் விழித்தனன் துடித்தனன் மட்கிய முகத்தினன் வாயிதழ் மடித்தனன் செய்வதொன் றறியான் சிலைபோல் நின்றனன்; | |
| | |
| துருவன் ஐயப்பாடு | |
| | |
| மைமன முடையான் மதியிலி நிழல்போல் | |
| தொடர்ந்து பின்வரும் துருவன், அவ்விடை | 160 |
| இடம்படும் அறையுள் இளையோன் புகுதக் கண்டோன் ஐயமும் கடும்படர் சினமும் கொண்டோ னாகிக் கொடுவரி நிகர்த்துக் கதவிடை ஒருபாற் கரந்தனன் நிற்க; | |
| | |
| எழுந்தவள் சீற்றம் | |
| | |
| மதர்விழி மாதவள் மலரணை விடுத்தே | 165 |
| ஒய்யென எழுந்தவள் ஒளிமுகஞ் சிவந்து கைதவன் நிற்றலைக் கண்டுளஞ் சினந்து `விழையா மகளை விழையா நின்றனை, இழிவாம் இச்செயல் இயற்றிடத் துணிந்தனை. | |
| நாணா மதியினை நங்கையர் வாழ்வில் | 170 |
| மாணா வினைசெய மனங்கொண் டனை,நீ பொருந்தாக் காமம் பொருந்தா தென்று திருந்தா வுனக்குச் செப்பிய வெல்லாம் மறந்தாய் கொல்லோ? மதர்த்தனை கொல்லோ? | |
| இரவிடை ஒருமகள் தனியிடன் குறுகக் | 175 |
| கரவுளங் கொண்ட காமுகன் நீதான் உரமிக வுடையாய்! ஒண்டொடி மாதர் | |
--------------------------------------------------------------- |
| மட்கிய - மங்கிய, மைமனம் - குற்றமுள்ள மனம், கொடுவரி - புலி, கரந்தனன் - மறைந்து, கைதவன் - ஒழுக்கம்கெட்டவன். | |
| | |