| |
| | கேட்பவர் மதியும் கேடுறின் நம்புவர், | |
| | நாட்பட விளங்கும் நயவஞ்சம் என்றனர்; | 30 |
| | பசுப்போல் இருந்தனள் பாவி இவள்தான் வெறுக்குங் கொலைத்தொழில் விளைத்தனள் என்றனர்; நல்லவர் கெட்டவர் நாமுண ராவகை உள்ளனர், என்ன உலகமிஃ தென்றனர்; | |
| | பெண்ணுருக் கொண்டுள பேயிவள் என்றனர்; | 35 |
| | பெண்குலங் கெடுக்கும் பெற்றியள் என்றனர்; இவ்வணம் ஊரார் இடுபழி கூறினர்; | |
| | | |
| | நல்லோர் வருந்துதல் | |
| | | |
| | இவட்கோ இப்பழி! இழைத்தவர் எவரோ! அவட்கோ கொடுஞ்சிறை! அடஓ கொடுமை! | |
| | ஆவின் இயல்பும் அடங்கிய பண்பும் | 40 |
| | மேவிய மெல்லியற் கொடிக்கோ கொடுமை! சொல்லும் செயலும் நல்லன புரிவோள் கொல்லுந் தொழிலைக் குறிப்பளோ? கொடுமை! செந்நெறிப் படரும் சேயிழை யிவட்கே | |
| | இந்நிலை வருமெனின் என்னே வுலகம்! | 45 |
| | பெண்மைப் பண்பிற் கிலக்கணம் இவளே உண்மைக் கழிவினை உலகந் தந்ததோ! இரவும் பகலும் இனியநற் பணியே புரியும் இவட்கோ புன்மொழி கொடுமை! | |
| | வழுவாத் துறவும் வாய்மையுந் தூய்மையும் | 50 |
| | தொழிலாக் கொண்டவள் துயருறல் நன்றோ! கலைபுரி யிவளோ கொலைபுரி செயலினள்? இலைமதி அவர்க்கென இயம்புதல் சாலும்! பலர்பலர் கூடிப் பண்பினர் இன்னன | |
| | சொலுமொழி வாயினர் சோர்ந்து நின்றனர்; | 55 |
| | | |
| | இரவின் ஆட்சி | |
| | | |
| | கனவிலும் தீமை கருதா நல்லவட் கினைதுயர் இவ்வணம் ஏற்படல் காணா எரிகதிர்ச் செல்வன் ஒளிமுகங் குன்றி வருந்திக் குடதிசை மறைந்தன னாகச் | |
| | சுருள்படு பழுதை விரிபட அரவென | 60 |
| | | |