| |
| | சிறந்தவர் நிலக்கிழார் பெருந்துணை யாக | |
| | நன்னுதல் அவர்மனை நண்ணினள் எனச்சிலர் | 50 |
| | பன்னுதல் கேட்டுப் பாவையும் அடிகளும் புயலிற் சிக்கிய மரக்கலம் ஊர்வோர் வியனலை உந்த விடுகரை சேர்ந்தார் உள்ளம் போலத் துள்ளிய உவகை | |
| | வெள்ளம் பொங்க விம்மும் நெஞ்சினர் | 55 |
| | பெருநிலக் கிழவர் உறுமனை குறுகி மறுவறு பூங்கொடி மதிமுகங் கண்டனர்; | |
| | | |
| | அருண்மொழி வாழ்த்து | |
| | | |
| | கலங்கிய கண்ணினள் காலடி வீழ இளங்கொடி உடலை இருகையால் எடுத்தனள்; | |
| | உச்சி மோந்தனள் மெச்சினள் வாழ்த்தினள் | 60 |
| | வைத்தகண் வாங்கிலள் `வயிற்றினில் பால்தனை வார்த்தனை மகளே வார்த்தனை' எனுமொழி சேர்த்தனள் அருண்மொழி; செம்பொருள் அடிகள் | |
| | | |
| | அடிகளார் வாழ்த்து | |
| | | |
| | `பழியெனுங் கருமுகில் பாவையாந் திங்களை | |
| | வழியினில் மறைத்து, கழிபடர் இருள்எம் | 65 |
| | உளத்தினிற் பரந்து வளைத்த தாயினும் கணத்தினில் முகிலிருள் காற்றிற் பறந்தன; வாழிய மகளே! வாழிய மகளே! வளர்தமிழ்ப் பணிக்கு வருமிடர் பலவாம், | |
| | தளர்மனங் கொள்ளேல், தாயே நம்முயிர் | 70 |
| | இழப்பினும் இழப்போம் இனியநந் தாய்மொழி வளர்ப்பதே நங்கடன் வாழிய மகளே! உயிரும் உடலும் ஒழிவன வாயினும் செயிரறு நம்பணி செந்தமிழ்க் காகின் | |
| | உயரிய புகழொடு ஒண்டமிழ் வாழும், | 75 |
| --------------------------------------------------------------- |
| | நன்னுதல் - பூங்கொடி, பாவை - அருண்மொழி. | |
| | | |