| 27. அயல்நாடு சென்று வந்த காதை | 
                  | மயில்வாகனர் பூங்கொடியை அயல்நாடுசெல்ல வேண்டுதல் | 
                  |  | 
                  |   | ஒப்பிலா யாழ்நூல் செப்பிய பெருமகன் கப்பிய அன்பினால் கனிமொழி நோக்கிப்
 `பூங்கொடி! நினக்கொன்று புகலுவ துடையேன்
 ஆங்கிலம் முதலா அயன்மொழி யாவும்
 |  | 
                  |  | தீங்கற வுணர்ந்த தெளிதமிழ்ப் புலவரும் | 5 | 
                  |  | தொல்கலை பலவும் தொகுத்தவை ஆயும் பல்கலைக் கழகத்துப் பணிபுரி பெரியரும்,
 மொழிநூல் வல்ல முதுபே ரறிஞரும்,
 நுழைபுலங் கொண்ட நுண்மாண் கலைஞரும்,
 |  | 
                  |  | உலக நாடுகள் பலவும் சென்று | 10 | 
                  |  | கொழிதமிழ்ப் பெருமையைக் கூட்டி யுணர்த்தவும், மொழியயற் கலைகள் முட்டின் றுணரவும்,
 தம்முட் குழீஇத் தமிழ்த்தூ தேகக்
 குறித்தனர் செல்வி!அக் குழுவினுள் நீயும்
 |  | 
                  |  | ஒருத்தி யாதலை உவந்ததென் மனனே; | 15 | 
                  |  | தமிழுக் கிஃதொரு தனிப்பே ராக்கம் இமிழ்கடல் வரைப்பும் ஏத்தும்நின் புகழை
 நின்னுளம் யாதென நிகழ்த்துதி அம்ம!'
 |  | 
                  |  |  |  | 
                  |  | மலையுறையடிகள் மனமிசைக எனல் |  | 
                  |  |  |  | 
                  |  | என்னலும் அம்மகள் அன்னையை நோக்கி |  | 
                  |  | முன்னுள அடிகள்தம் முகமும் நோக்கினள்; | 20 | 
                  |  | குறிப்புணர் அடிகள் கொடிக்கிவை கூறினர்; |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | கனிமொழி - பூங்கொடியை, நுழைபுலம் - ஆராயும் அறிவு, நுண்மாண் -           நுண்ணிதாக மாட்சிமையுற்ற, கொழிதமிழ் - செழிக்கும் தமிழ், குழீஇ - கூடி, குறித்தனர்           - கருதியுள்ளனர். வரைப்பு - உலகம், கொடிக்கு - பூங்கொடிக்கு. |  | 
                  |  |  |  |