| 29. அறப்போர் நிகழ்த்திய காதை | 
                  | முத்தமிழ் மாநாடு | 
                  |  |  |  | 
                  |  | கலைமிகு தமிழ்மொழி காக்கும் நோக்கோடு |  | 
                  |  | மலையுறை யடிகள் மாநாடொன்று மணிநக ரென்னும் மாநக ரதனுள்
 அணிபெறக் கூட்டினர்; அப்பே ரரங்கில்
 |  | 
                  |  | 
                  | பன்னாட்டறிஞர் பாராட்டுரை | 
                  |  |  |  | 
                  |  | பைந்தமி ழுணர்ந்த பற்பன் னாட்டினர் | 5 | 
                  |  | ஐந்தெனும் இலக்கண அமைப்புறும் செந்தமிழ் மேன்மையைப் பான்மையை மேம்படு புலத்தால்
 ஆய்ந்தவை கூறி அதன்நலம் பரப்ப
 வாய்ந்தவும் உரைத்துத் தோய்ந்தனர் களிப்பில்;
 |  | 
                  |  | பன்னாட் டிசையும் பகுத்துணர்ந் தாய்ந்தோர் | 10 | 
                  |  | தென்னாட் டிசையின் திறமெலாம் வியந்தே எந்நாட் டெங்கணும் இதுபோற் காண்கிலேம்
 எனஅவர் தம்முள் ஒருசிலர் உரைத்தனர்;
 குவளை நிகர்க்கும் கூர்விழி யிணையால்,
 |  | 
                  |  | பவழ இதழால், பைந்தளிர் விரலால், | 15 | 
                  |  | பொற்புடை நுதலால், புருவச் சிலையால், உட்குறிப் புணர்த்தும் மெய்ப்பா டனைத்தும்
 தெற்றென விளக்கித் தெரிவையர் ஆடுங்
 கலையெழிற் றிறமெலாம் பலபடப் புகழ்ந்தனர்;
 |  | 
                  |  | 
                  | தென்னாட்டார் தெளிவுரை | 
                  |  |  |  | 
                  |  | முத்தமிழ் காவலர், மொழித்துறை ஆய்வினர், | 20 | 
          |  | புத்தமு தென்னப் புதினம் படைக்குநர், செந்தமிழ்க் காவலர், சிந்தனைப் புலவர்,
 பைந்தமிழ் நாவலர், பன்மொழிப் புலவர்,
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | உட்குறிப்பு - மனக்குறிப்பு. |  | 
                  |  |  |  |