| 2. பழியுரை காதை | 
                  | வஞ்சியின் கவலை | 
                  |  | 
                  |   | முத்தமிழ் காக்கும் முதற்பணி பூண்ட நத்தும் வடிவேல் நன்மணம் புணர்ந்த
 பத்தினித் தெய்வம் பாங்குயர் அருண்மொழி
 இத்தரை உய்ய ஈன்றருள் மகளாம்
 |  | 
                  |  | தத்தை பூங்கொடி தாயொடு மங்கலத் | 5 | 
                  |  | தைத்திரு நாளில் தமிழிசை வழங்க வாராத் துயரால் மயங்கிய வஞ்சி
 சோரா நின்றனள்; தன்மகட் டோழி
 தேன்மொழி யைக்கூஉய்த் திருநகர் கூறும்
 |  | 
                  |  | தீமொழி அருண்மொழிக் குரையெனச் செப்பினள்; | 10 | 
                  |  |  |  | 
                  |  | தேன்மொழி செல்லல் |  | 
                  |  |  |  | 
                  |  | அவ்வுயிர்த் தோழியும் அருண்மொழி நிலைக்கு வெவ்வுயிர்த் தேங்கும் வினையினள் ஆதலின்
 பூங்கொடி தன்னோ டருண்மொழி வைகும்
 பாங்குடை இல்லிற் புகுந்தனள் பாங்கி;
 |  | 
                  |  | அருண்மொழி மேனி அழிநலங் கண்டு | 15 | 
                  |  | மருண்மனங் கொண்டு `மங்காய்! நின்னை இவ்வூர் மாக்கள் இகழ்ந்துரை கூறினர்;
 |  | 
                  |  |  |  | 
                  |  | அருண்மெழியின் இசைப்புலமை |  | 
                  |  |  |  | 
                  |  | செவ்விய இசைநூல் இவ்வுல குள்ளன அவ்வள வும்பயில் அறிவினள்; பிறமொழி
 |  | 
                  |  | இசைபல முயன்று வசையற வுணர்ந்து | 20 | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | கூஉய் - அழைத்து, வைகும் - தங்கும், மருள் - மயக்கம், மாக்கள்           - மக்கள் |  | 
                  |  |  |  |