| | வெருகன் நய வஞ்சகம் | |
| | | |
| | நீறுறு நெற்றியன் நிகரிலாச் செல்வன், ஏறெனப் பொலிவுறும் இளைஞன் அழகன், | |
| | காண்போர் மயங்கும் காட்சியன் உலகில்அவ் ஆண்போல் ஒருவனைக் காணுதல் அரிது, பிறர்மனங் கவரப் பேசும் வன்மையன், அறமுறு செயலே ஆற்றுவான் போல எண்ணும் வகையில் இருப்பவன் வெருகன் | 70 |
| | நண்ணி என்னை நயவஞ் சகமாக் கடத்திச் சென்றான் கதறியும் பயனிலை விடலை தமியளை வீழ்ந்திடச் செய்தனன்; அவன்மொழி நம்பி அவன்வழிப் பட்டேன்; தவலரும் வாழ்வு தக்குமென் றிருந்தேன்; | 75 |
| | என்னலம் உண்டான் எண்ணம் முடிந்ததும் உன்னிலன் அறத்தை ஒளிந்தனன் ஓடி; செல்வமும் வேடமும் செய்பிழை மறைக்கும், மாசுறு கற்பை மறைப்பது யாங்ஙனம்? | 80 |
| | | |
| | யானும் உடன் செல்வேன் | |
| | | |
| | இழிவும் ஏசலும் ஆடவர்க் கில்லை | |
| | பழியும் நலிவும் பாவையர் தமக்கே; ஆதலின் பூங்கொடி ஆங்கவள் தனித்துப் போதல் சரியிலை யானுடன் செல்வேன்; | 85 |
| | | |
| | இருவகைப் பூங்கா | |
| | | |
| | மேலும் வடதிசை மேவிய பூங்கா தேளும் பாம்பும் என்னச் செப்பிடும் | 65 |
| --------------------------------------------------------------- |
| | விடலை - திண்ணியன், தக்கும் - நிலைக்கும் | |
| | | |