| 9. திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை | 
                  | நாவலர் வருகை | 
                  |  | 
                  |   | அந்நகர் மக்கள் அறியா மையிருள் வெந்நிட அறிவொளி விரித்தெழு செஞ்சுடர்ப்
 பரிதி என்னப் பாவை விளங்க,
 உரிமை வேட்கையும், உன்னும் பண்பும்,
 |  | 
                  |  | உன்னிய தஞ்சா துரைக்கும் உரனும், | 5 | 
                  |  | முன்னூ லாகிய முத்தமிழ் வகைக்கும் விரித்துறை திறனும், வியனுறு குறள்நூல்
 உலகெலாம் பரவ உழைக்கும் செயலும்,
 உடையார் அறிவுப் படையார் ஒருவர்
 |  | 
                  |  | நடையால் உயர்ந்த நாவலர் அந்நகர் | 10 | 
                  |  | வருமவர் பூங்கொடி வந்துள தறிந்து பெரும்பே ராசான் அருங்குண அறிஞர்
 திருமா மகளைத் தேடி வந்தனர்;
 |  | 
                  |  |  |  | 
                  |  | பூங்கொடி நிகழ்ந்தன கூறல் |  | 
                  |  |  |  | 
                  |  | வணங்கினள் தொழுதனள் வாழ்த்தினள் எழுந்து |  | 
                  |  | மணங்கமழ் மாலை சூட்டிப் `பெரியோய், | 15 | 
                  |  | நின்மொழி ஏற்று நெடுநாள் பயின்று மன்னிய குறள்நூல் மாசறத் தெறிந்தேன்;
 குறளகம் கண்டார் குமணன் போன்றார்
 அருளறம் பூண்டார் மலையுறை யடிகள்
 |  | 
                  |  | அவர்தம் துணையால் அறிவொளி பெற்றேன்; | 20 | 
                  |  | உவர்நீர்க் கடல்நகர் உவந்தீண் டுற்றேன், மொழியுணர் வூட்ட முனைந்தேன், சிலரால்
 பழியுரை பெற்றேன், பகுத்தறி வில்லான்
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | வெந்நிட - புறமுதுகிட, உரன் - வலிமை, நடையால் - ஒழுக்கத்தால்,           உவர்நீர் - உப்புநீர். |  | 
                  |  |  |  |