பக்கம் எண் :

16

ஓர் நாள்....

கவிஞர் இராசேந்திரன் (மீரா) பாடுகிறார்.

“சந்திரனைப் படைத்துப்பின் இயற்கையெனும் சிற்பி
சரியில்லை இதுவென்று விட்டெறிந்து நன்றாய்ச்
சிந்தித்து மிகமுயன்று படைத்தளித்த அழகின்

திரட்டே! நீ கிடைத்தால் நான் பணக்காரன் வீட்டுப்
பந்தியிலே இருந்துண்ண இடம் கிடைத்தால் மகிழும்

பசிகாரன் போல் மகிழ்வேன்! கிடைப்பாயா?”

என்று அவன் அன்பு குழைய அவளிடம் கேட்டான். அவளைப்
பாருங்கள்!

“முந்தியெழும் பெருமூச்சை உள்ளடக்கித் துன்ப
முத்திரையை வெளிக்காட்டிக் கனி உதட்டைத் திறந்தாள்”

திறந்து என்னதான் சொன்னாள்?

“கலையழகுச் சித்திரம்போல் கண்கவரும் உம்மைக்
கைப்பிடிக்கக் கடல் அளவு ஆசைதான்! ஆனால்
மலையாள மங்கைநான்! தமிழ்மகன் நீர்! இனிதாய்

மணம்புரிய வழியுண்டா நாம்? என்று கேட்டாள்”

இந்த இடத்தில் பாரதிதாசனின் தலைவனாக இருந்தால்...

அதைநாம் ஏன் சொல்ல வேண்டும்? அகல்யா வீழ்ந்த அந்தக்
கிணற்றையே கேளுங்கள்!

இராசேந்திரன் இப்படியா படைத்துள்ளார்?

இராசேந்திரனின் தலைவன் என்ன சொன்னான்?

“சிலையே! நற் காதல்முன் சாதி இன பேதச்
சிந்தனைக்கே இடமில்ல வா”

என்று சொன்னான். பின் “ஆனந்தம்! ஆனந்தம்! ஆனந்தம்!
அங்கே” என்று கவிஞர் முடிக்கின்றார்.

பாராட்டவேண்டும்.... சொல்லாட்சி, உணர்ச்சிப் பெருக்கு, நடைநயம்
இவற்றை நோக்கும்போது கவி பாரதிதாசனைத் தன் முன்னோடியாக
நினைத்து