கல்லூரியாக்க முதல் முயற்சி எடுத்தார்.1 அதை என்றும் நன்றியோடு நினைவு கூர்வேன். இன்னொரு சம்பவம். கவிக்கோவின் மணிவிழா அன்று ‘திருமணி’யில் ‘மஹாபலிபுரம் சாலையில் ஒரு கவிதா மண்டலம் காணவேண்டும்’ என்று எழுதியிருந்தேன். ஓவியர்களுக்கு அமைந்துள்ள சோழ ண்டலம் போல் கவிஞர்களுக்காக ஒரு கவிதா மண்டலத்தை கலைஞர் உருவாக்கித் தரவேண்டும் என்று கோரியிருந்தேன். காலையில் ‘தினமணி’யைப் படித்துவிட்டு மாலையில் கவிக்கோவைச் சிறப்புச் செய்து பேசும்போது, ‘தம்பி மீரா எழுதிய தினமணி கட்டுரையைப் படித்தேன். அதில் ஒரு திருத்தம்; மஹாபலிபுரம் அல்ல; மாமல்லபுரம். மற்றபடி அவருடைய கோரிக்கை நிறைவேற்றப்படும். அரசு ஏற்றுச் செயல்படும்’ என்று பலத்த கரவொலிக்கிடையில் சொன்னார். வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மெய்சிலிர்த்தது. கலைஞர் என்றால் கலைஞர்தான் என்று என்னையறியாமல் என் வாய் உச்சரித்தது. மணிவிழா முடிந்த மறுவாரம் கவிதா மண்டலம் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன இருக்கவேண்டும் என்பது குறித்த வரைபடம் (Blue print) ஒன்றை கவிக்கோவும் நானும் கலைஞரின் வீட்டுக்குச் சென்று கொடுத்தோம். அப்புறம் அண்ணா அறிவாலயத்தில் அவரைச் சந்தித்தபோது கவிதா மண்டலம் கோப்பு மாண்புமிகு தமிழ்க்குடி மகனிடம் இருக்கிறது என்றார். அவரை போய்த் தூண்டி விடுவோம் என்று நினைத்தபோது அவர் எங்கோ தாண்டிபோய் விட்டார். தேர்தல் வந்தது. ஆட்சி போனது. மக்கள் தீர்ப்பு மகத்தானதல்லவா? 1 பிறகு மாண்புமிகு எம்.ஜி.ஆர்.காலத்தில் அரசால் ஏற்கப்பட்டது. |