பக்கம் எண் :

70.மீரா கவிதைகள்

வித்தில் லாதோன் நிலத்தை உழுதென்?
விளைவைக் காண முடியுமா?
விரல்இல் லாதோன் விருப்பங் கொண்டென்?
வீணை இசைத்திட முடியுமா?
சொத்தில் லாதோன் சுகத்தின் உருவகச்
சொர்க்கம் அடைந்திட முடியுமா?
சுடரே! ஆசை வளர்ந்தென்? உன்னைச்
சொந்தம் ஆக்கிட முடியுமா?

‘தமிழ்நாடு’
நவம்பர், 11, 1962.