புலவர் சிவ. கன்னியப்பன் 107

பண்டிதர் அனைவர்க்கும் பான்மை இன்னதே.
இப்போது பண்டிதர் எப்படி என்றிட
அவர்களைப் பற்றிநான் சிறிதும் அறியேன்.
மற்ற மாணவர் மரியாதை குறையினும்
பண்டித ருக்குநான் பணிந்தே பயின்றேன்.       45

எனினும்; பண்டித ரென்றால் இளக்கமாய்
ஏளனம் செய்பவர் இடையே வளர்ந்தவன்.
ஆகையி னாலே, தீயஅப் பழக்கம்
எனக்கும் தெரியாமல் இருந்தது போலும்!
அப்படி யிருக்க,       50

உலகுக் கெல்லாம் உணவு கொடுத்து
வந்தவர்க் கெல்லாம் வடித்துக் கொட்டி
ஞானமும் ஊட்டி நல்வழி காட்டிக்
கல்வியும் கலைகளும் கற்கச் செய்து
வீரமும் தீரமும் வெற்றியும் கண்டே       55

அன்பின் முறைகளில் அரசு புரிந்து
சாந்தி மிகுந்த தனிச்சிறப் புள்ளதாய்,
வந்து பார்த்தவர் வாழ்த்தி வணங்கும்
நாடா வளந்திகழ் நாடா யிருந்தும்
பேரும் புகழும் பெருமையும் கெட்டுத்       60

தன்னர சிழந்து தரித்திரம் மிஞ்ச
அன்னிய நாட்டுக் கடிமைப் பட்டும்,
அறிவும் ஆற்றலும் ஆண்மையும் மறைந்து
நொந்து கிடக்கும் இந்தியத் தாயின்
சுதந்தரப் போரைத் தொடங்கிய தூயோன்.       65

தெய்வத் திருக்குறள் திருவாய் மலர்ந்த
வள்ளுவ முனிவனே வந்துவிட் டதுபோல்
உழவும் உழைப்புமே உயர்ந்த தொழிலாய்
வாழ்ந்து காட்டும் நவீன வள்ளுவன்,
‘ஏழையின் துயரம் என்துயர்‘ என்போன்       70