புலவர் சிவ. கன்னியப்பன் 265

மானமி ழந்தும தியிழந் துபுகழ்
       தானமி ழந்துத வமிழந்து
ஞானமி ழந்துந லமிழந்து நாமும்
       போன கதியினைப் பாருங்கடி!       10

காசு பணத்தைக்கை விட்டா லுங்கதிர்
       வீசும் புகழை விடலாமோ?
வீசும் புகழையும் விட்டுவிட் டோம்சற்றும்
       வெட்கமு மின்றி வெளியில் வந்தோம்.       11

நல்ல குடியிற் பிறந்தோமடி நாமும்!
       நல்ல நிலையி ருந்தோமடி
தொல்லைப் பிறப்பும் புகழும் மறந்துநாம்
       தொண்டுசெய் தொண்டரின் தொண்டரானோம்       12

பேரும் புகழும் பெருமையுங் கொண்டவர்
       போரின் போரின் போரடி
சீரும் சிறப்பையும் விற்றுவிட்டுநாமும்
       சின்னத் தனத்தினைத் தேடிக்கொண்டோம்.       13

உத்தம ஜாதியின் மனிதர டிநாமும்
       உத்தம மான குலத்தரடி!
பத்தினி ஜாதியின் பாவையே நாமிப்போ
       பஞ்சப் பனாதிக ளானோமடி!       14

வீரர் குடித்தன வீரர டிநாமும்
       வீரருள் வீரரின் போரடி!
சூரர் குடித்தனச் சூரர டியிப்போ
       சோற்றுக்கும் நீருக்கும் சோருதடி!       15

வேந்தர் குடிவந்த மாந்தர டிவெகு
       வெற்றி யடிநாம் பெற்றதடி!
சோர்ந்து சுழன்று சுழித்துத் திரிகின்றோம்
       சொக்கு தடிமனம் வெட்குதடி!       16