362நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஒத்து வாழ்வது மெத்த வும்நல்
              பத்தி லாவது உண்மையால்
       உள்ள வேறுஇனி என்ன வேற்றுமை?
              ஒன்று மேயிலை என்னலாம்.
சத்தி யத்தினும் சாத்வி கத்தினும்
              சார மாகிய காந்தியின்
       சமர சத்தனி சங்க நாதம்
              முழக்கு கின்றஇச் சமயமே
யுத்தம் என்கிற பித்தை வெட்டிட
              உலகி னுக்குஒரு உதவியாய்
       ஊழி யம்செய ஈழ நாடுதன்
              உரிமை பெற்றதை வாழ்த்துவோம்.       5

224. ஆயுத பலத்தை நம்பாதே

ஆயுத பலத்தை நம்பாதே
       ஐரோப்பியர்போல் வெம்பாதே
ஞாயமும் அன்பும் நமதுதுணை
       நமக்கார் உலகில் வேறுஇணை?       1

எந்திர சக்திகள் ஏய்த்துவிடும்
       எண்தவர் தமையும் மாய்த்துவிடும்
தந்திர உத்தியும் சதமல்ல
       தாரணி மதிப்பது அதையல்ல.       2

சாகிற துணிச்சல் போதாது
       சற்குணம் இலையேல் தீதாகும்.
வேகிற நெருப்பால் சமைத்திடலாம்
       வெறுந்தணல் உணவாய் அமைந்திடுமோ?       3

தைரியம் எத்துணை இருந்தாலும்
       தர்மமும் கருணையும் பொருந்தாமல்
செய்கிறது எல்லாம் சிறுமை தரும்
       செம்மையும் நன்மையும் வறுமையுறும்.       4