அன்பின் வழிநடந்தே அறங்கள் நிலைநிறுத்த அர்ப்பணம் நான்என்றாய் மனமே! துன்பம் மிகக்கொடுக்கும் ஆசைகள் தூண்டிட தூய்மையிற் குறைந்தனை மனமே! 3குறிப்புரை:- அர்ப்பணம் - உரியதாக்கல், ஒப்பித்தல்; சங்கற்பம் - மனவுறுதி, துணிவு;அகந்தை கர்வம்;தூய்மை - சுத்தம். 70. உண்மை வளர்ந்திடாமல் பல்லவி உண்மை வளர்ந்திடாமல் ஒழுக்கம் உயர்ந்திடாமல் உண்டோ சுதந்தரமே? (உண்) அநுபல்லவி பெண்மை நிறைந்தவெறும் பேதைகள் பக்தியென்ற பேச்சுக்கோ அளவில்லை சீச்சீஇதென்ன தொல்லை (உண்) சரணம் அதிகாரம் செலுத்திடும் ஆசை மிகவுமுண்டு அதனாலே பணம்சேர்க்கும் ஆத்திரமே கொண்டு எரிகின்ற வீட்டிலே எடுத்தது லாபமென்னும் எண்ணமுடையவர்க்கு நண்ணுமோ சுதந்தரம் (உண்)1 நாவினிற் சுதந்தரம் நாட்டம் பணத்தில்குறி நல்லதோ பொல்லாதோ வந்தவரையில்சரி பாவபுண் ணியமெல்லாம் பண்டைக்கா லத்துப்பேச்சு பாதகம் குறையாமல் பாவனை எதற்காச்சு? (உண்)2 சாத்திரம் வேதமெல்லாம் நாத்திகத் தாடுது சாமிகள் கோவிலிலே தாமங்கே வாடுது மாத்திரை அளவேனும் மனதில் நினைவில்லார்க்கு மங்கள சுதந்தரம் எங்கே வருமவர்க்கு? (உண்)3 குறிப்புரை:- பாதகம் - பெருந்தீவினை. 5 நா.க.பா. பூ.வெ.எ. 489 |