புலவர் சிவ. கன்னியப்பன் 211

கடமை யென்று கருணை செய்யும்
              காலம் வந்து சேருமே
       கட்சி கட்டும் பட்ச மற்ற
              காரி யங்கள் மாறுமே
உடமை சொத்தம் ஒன்று மின்றி
              உடல்சு கிக்க வாழலாம்
       உலகி லெங்கும்கலக மின்றி
              உரிமை கொள்ளச் சூழலாம்.
கொடுமை யாற்ற ராஜ ரீகம்
              குலவி யாளக் காணலாம்
       கொஞ்ச மிந்தத் ‘தியாக புத்தி‘
              மட்டும் மக்கள் பேணினால்.       2

154. அரும்பெரும் செல்வம்

துறவிக்கு மட்டுமா அன்பின் தொடர்பு?
இல்லறம் முற்றலும் அன்பின் இயக்கமே
அன்பின் திறங்களை யாரே அறிவார்!
அன்பின் சிறுமையே ஆசை என்பதாம்
அன்பின் பெருமைதான் காதல் ஆவதும்.       5

அன்பின் விகாரமே காமமாய் அலர்வதாம்.
அன்பின் விரிவுதான் அருளாய் மலர்வது.
மனைவியும் மக்களும் மற்றுள சுற்றமும்
நண்பரும் என்பதாய் நம்மையே நாடும்
பற்றுள் ளவரிடம் பட்சமே அன்பாம்.       10

பற்றிலா எவர்க்கும் பற்றுவிட் டவர்க்கும்
பகைமையே நம்மிடம் பாராட்டு வோர்க்கும்
அன்பே செய்தல் அருள்எனப் படுவது.
துறவறம் அருள்செயத் துணைதரும் எனினும்
இல்லற வாழ்விலும் அருளோடு இருப்பதே.       15