| வேதநாயகம் பிள்ளை வரலாறு |
| மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்த பின்னர், அவர்கள் குடும்பத்தார் வறுமையுற்று வாடி நலிந்தமை கண்டு மனம்பொறாராய்த் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அவர்கள் அருட்கொடையால் அவ் வறுமையைப் போக்கி நலமுற்று வாழ வழிசெய்தனர். |
| வேலைவிடுதியும் பொதுநலப்பணியும் |
| 1872-ஆம் ஆண்டில் வேலைவிடுதி பெற்றுப் பொதுநலப் பணியில் ஈடுபாடுற்றுத் தம்மிழப்பாய்த் தொண்டு பல புரிந்தனர். மாயூரம் நகராண்மைக் கழகத் தலைவராய் அமர்ந்து செயற்கருஞ் செயல் பல புரிந்தனர். |
| பேராவியற்கை பெறுதல் |
| 1889-ஆம் ஆண்டு, சூலைத்திங்கள் 21-ஆம் நாள் இரவு இறுதிக்காலத்து எய்தும் அலமரல் ஏதுமின்றி, இறை நினைவுடன் இவ்வுலக வாழ்வை நீத்துச் செம்பொருளின் திருவடியிணையைச் சேர்ந்தின்புற்றார். மாணவர் நண்பர் புலவர் உலகோர் அனைவரும் சொல்லொணாக் கையறுநிலை எய்திப் பாவாலும் நாவாலும் பாடி யுரைத்து வருந்தினர். பின்பு பிள்ளையவர்களின் ஆருயிர் இன்புற எண்ணி இறைவனை வழுத்தி அமைந்தனர். |
| இயற்றிய நூல்கள் |
| இவர் இயற்றிய நூல்கள்: 1. நீதிநூல் 2. பெண்மதிமாலை 3. பிரதாப முதலியார் சரித்திரம் 4. சுகுண |