| | பெண்மதிமாலை |
| | காப்பு |
| | | விண்மதி மாலை விலக்கல்போன் மெய்தோன்றப் பெண்மதி மாலையான் பேசவே--தண்மதிசூழ் அண்டபகி ரண்டமு மகண்டமே யுண்டெனமெய் கண்டவரி ரண்டுகழல் காப்பு. | |
| | இராகம்-நாதநாமக்கிரியை] | [மிச்ரதாளம் |
| | கண்ணிகள் |
| | மதியிது மதியிது வதியல்ல வோநல்ல | பெண்ணே-புண்ய மகராசிகண்ணே-மதி |
| | 1 |
| | தெய்வ பத்தி |
| | நித்தியங் கடவுளை பத்தியுடனே நீ | வாழ்த்து-பய பணிந்துன்னைத் தாழ்த்து-மதி |
| | 2 |
| | தூயதே வாலயம் தாயைத் தேடுவதுபோற் | நாடு-பிள்ளை சாமியைத் தேடு-மதி |
| | 3 |
| | கர்த்தாவை மறக்குதல் செத்தால் தெரியுமே | தாழ்வு-நாளைச் செட்டியார் வாழ்வு-மதி |
| | 4 |
| | எண்ணவொண்ணா வுப புண்ணிய மூர்த்திக்குப் | காரம்-செய்த புரி நமஸ்காரம்-மதி |
| | 5 |