பக்கம் எண் :

17

  பெண்மதிமாலை
  சத்திய மார்க்கத்தைக் கூடு-தெய்வ
பத்தியே பாக்கியம் பந்தயம் போடு-மதி
  18
  செபமின்றி நீபடுக் காதே-நாளும்
செபமின்றி யொருவேலை நீ தொடுக்காதே-
  19
  மதியிது மதியிது பெண்ணே-புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.
  குரு வணக்கம்
  குருமாரை வணங்கிக்கொண் டாடு-அவர்
திருவாக்குக் கெதிர்வாக்  கில்லாமலே நாடு-மதி
  20
   
  நித்தமும் குருவின்க டாக்ஷம்-பெற்ற
சுத்தருக் கல்லவோ சூக்ஷமத்தின் மோக்ஷம்-மதி
  21
  ஞான குருவுப தேசம்-இல்லா
ஈனருக் கில்லையே யென்றும் ப்ரகாசம்-மதி
  22
  பூலோக வாழ்வெல்லாம் நீங்கி-வந்த
மேலோரைக் கைதொழ வேண்டு நான்பாங்கி-மதி
  23
  அற்பருக் கூழியர் நாமே-ஆதி
தற்பர னூழியர் சாமிகள் தாமே-
  24
  மதியிது மதியிது பெண்ணே-புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.