பக்கம் எண் :

18

  தாய் தந்தையர் வணக்கம்
  மாதா பிதாவை வணங்கு-நாளும்
ஆதாரமா யவர் சொல்லுக் கிணங்கு-மதி
  25
  அறிவுரை
  தந்தைதாய் சாபம்பொல் லாது-அவர்
சிந்தைநொந்தால் மக்கள் செல்வம் நில்லாது-மதி
  26
  மாதா பிதாவுக்கு த்ரோகம்-செய்யும்
பாதகரைச் சுற்றும் பாவ மநேகம்-மதி
  27
  பெற்றவர் நேசத்தைத் தேடு-அவர்
குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டாடு-மதி
  28
  தாய்தந்தைக் குதவாத பிள்ளை-தன
தாயுசும் வாழ்வு மடியோடே கொள்ளை-மதி
  29
  கட்டியுனைவளர்க்க நாமே-முன்பு
பட்டபாடுகள் சொல்லப் பாரதமாமே-மதி
  30
  உள்ளதாய் தந்தைக்குத் தீங்கு-செய்யும்
பிள்ளையைத் தன்பிள்ளை யேபழி வாங்கும்-மதி
  31
  கடலைப்போல் மாதா சகாயம்-அதற்
குடல்செருப்பாத் தைத்துப் போடுதல் ந்யாயம்
  32
  மதியிது மதியிது பெண்ணே-புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.
 
  அறிவுரை
  அடுக்குப்பானையை யுருட் டாதே-வெகு
துடுக்காகப் பலகாரங் களைச் சுருட்டாதே-மதி
  33
  தங்கையைத் தொடையிற்கிள் ளாதே-தம்பி
பங்குப் பணியாரத்தைப் பறித்துக்கொள்ளாதே-மதி
  34
  உன்னைப்போற் பிறரையும் நேசி-தினம்
பொன்னே ஞானபுத் தகங்களை வாசி-மதி
  35