பக்கம் எண் :

24

  கற்பு
  அருந்துணை வன்றனைத் தூண்டு-அவன்
திருந்தும்படி தினந் தேவனை வேண்டு-மதி
  94
  மாமிமேல் வன்மங்காட் டாதே-உன்றன்
சாமிக்கு மாமிக்குஞ்  சண்டை மூட்டாதே-மதி
  95
  தலைவன் நெஞ்சைக்கரைக் காதே-மாமி
தலைமேலே நீமிள காயரைக்காதே-மதி
  96
  நாத்திமேற் கச்சைகட் டாதே-வெகு
சாத்திரமாயவள் தலையை வெட்டாதே-மதி
  97
  தலையணை மந்திரந் தீது-கெட்ட
கலகக்காரிகளுக்குக் கட்டம் போகாது-மதி
  98
  வீட்டுக் கதிபதிநீயே-வெளி
நாட்டுக்கதிபதி யுன் னாயகன் சேயே-மதி
  99
  மதியிது மதியிது பெண்ணே-புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.
  கற்பு
  கற்பு நிலையேசிங் காரம்-அது
தப்பினோ ரழகு சவ அலங்காரம்-மதி
  100
  சீவன்போற் கற்பைக்காப் பாற்று-யார்க்கும்
சாவு தலைமேலே சாமியைப் போற்று-மதி
  101
  அரைக்காசுக் கழிந்திட்ட கற்பு-நூறு
மரக்காற்பொன் கொடுத்தாலும் வருமோ நீசெப்பு-மதி
  102
  அன்னிய னழகனா னாலும்-கற்பின்
மின்னிடையார்க்கவன் விஷநாகம் போலும்-மதி
  103