பக்கம் எண் :

25

  பெண்மதிமாலை
  கணவன் குரூபி யானாலும்-கொண்டா
மணமக ளுக்கவன் மன்மதன் போலும்-மதி
  104
  பேரைக் கெடுப்பவள் பெண்டோ-இந்த
ஊரைவாய் மூட வுலைமூடி யுண்டோ-மதி
  105
  சரசங்கள் பேசிக் கெடாதே-புவி
அரசனை நம்பிப்புரு சனைக் கைவிடாதே-மதி
  106
  வாசற்படி கட வாதே-பிறர்
ஆசைப்பட வொயி லாய் நடவாதே-மதி
  107
  சிற்றின்பந்தா னரை நொடியே-வரும்
குற்றமும் பழிகளுங் கோடிபொற் கொடியே-
  108
  மதியிது மதியிது பெண்ணே-புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.
  பாலரை வளர்த்தல்
  மக்களுக் கோரம்பண் ணாதே-உன்றன்
சக்களத்தி பிள்ளைக்குச் சதிகளெண்ணாதே-மதி
  109
  பலபிள்ளை பெற்றென்ன பாக்யம்-நன்மை
இலையெனில் மலடியா யிருப்பது யோக்யம்-மதி
  110
  புத்திரர்க் கன்புபா ராட்டு-தெய்வ
பத்தியும் புத்தியும் பாலைப்போ லூட்டு-மதி
  111
  இளந்தையி லேகல்வி போதி-மிக
வளர்ந்தபின் அழுதாலும் வருமோநன்னீதி-மதி
  112
  இளக்காரம் பாலர்க்குத் தீமை-பின்பு
வளர்த்தகடா மார்பிற் பாய்ந்ததொப்பாமே-
  113