பக்கம் எண் :

27

  பெண்மதிமாலை
  பல்வகை ஏழைகள் நிமித்தம்-அத்தன்
செல்வரைப் படைத்தனன் செகத்தில் ப்ரசித்தம்-மதி
  124
  யாசகர்களை யுப சரியே-சவர்க்க
வாசலில் தொண்டைமானுந் தோட்டியுஞ்சரியே-
  125
  மதியிது மதியிது பெண்ணே-புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.
  ஞானம்
  பூதல வாழ்வெல்லாம் பொய்யே-இங்கே
ஏதுமில்லாம லிறப்பது மெய்யே-மதி
  126
  எத்தனை பேர்புவி யாண்டார்-முன்னம்
அத்தனை பேர்களும் ஐயையோ மாண்டார்-மதி
  127
  பாட்டனார் பூட்டனா ரெங்கோ-போக
மாட்டோமென்றாலும் மரணம் நம்பங்கே-மதி
  128
  பூமியே நாடக சாலை-இதில்
சாமிதந்தாரே சகலர்க்கும் வேலை-மதி
  129
  வாவென்று தேவன்கை யோலை-வந்தால்
கோவென் றழுதாலுங் கூடுவோ மேலை-மதி
  130
  ஆவியென்ப தொரு மூச்சு-இது
மேவி யொடுங்கினால் வேறென்ன பேச்சு-மதி
  131
  எட்டிப்போ போவென்னும் வீடு-கையைக்
கொட்டிவா வாவென்று கூப்பிடுங் காடு-மதி
  132
  பாழுடல் மாமிச மூட்டை-இது
வீழப் பலசெந்து வுக்கு நல் வேட்டை-மதி
  133