பக்கம் எண் :

29

  பெண்மதிமாலை
  தோலு மெலும்புஞ் சரீரம்-இதை
மேலே மினுக்குவ தாலென்ன சாரம்-மதி
  146
  செட்டிதட் டான்செக்கா னாலே-வந்த
ஒட்டழ கன்றிஉள் ளதுவெறுந் தோலே-
  147
  மதியிது மதியிது பெண்ணே-புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.
  பாவம்
  மாற்றுவாய் பாவத்தை நீயே-நல்ல
காற்றுள்ள போதேநீ தூற்றிக்கொள் வாயே-மதி
  148
  அகங்காரம் மோகம் உலோபம்-பகை
மிகுங்கோபம் பேருண்டி சோம்புதல் பாபம்-மதி
  149
  மண்ணிலுண் டார்க்கொல்லும் நஞ்சு-நெஞ்சில்
எண்ணிடக் கொல்வதுபாவமே யஞ்சு-மதி
  150
  எவரையும் பாவம் விடாதே-நிலம்
அவரை விதைக்கத் துவரை கொடாதே-மதி
  151
  பாவஞ்செய் யவிரும்பில் அம்மா-ஆதி
தேவனரு ளொழிந்து தியங்குவாய் சும்மா-மதி
  152
  தீதுசெய் தால்நன்மை தருமோ-வேம்பை
நீதான் விதைக்கக் கரும்புவ ருமோ-மதி
  153
  தையலே யுலகங்கண் ணாடி-நாம்
செய்வதை யேயது செய்யு மே தேடி-மதி
  154
  வைவாரை வையுமே யுலகம்-தீமை
செய்வாருக் கேயது செய்யுமே கலகம்-மதி
  155