பக்கம் எண் :

30

  புண்ணியம்
  தன்வினை தனைச்சுடும் மயிலே-பாம்பை
முன்வளர்த் தவர்க்கமு  தீயுமோ குயிலே-மதி
  156
  இங்குமே துட்டநிக் கிரகம்-மானே
அங்குமே பாவத்துக் கவியாத நரகம்
  157
  மதியிது மதியிது பெண்ணே-புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.
  புண்ணியம்
  புண்ணியஞ் செய்யலாம் நாளை-என
எண்ணி யிராதே இது நல்ல வேளை-மதி
  158
  புண்ணியம் பாவமல் லாது-இந்த
மண்ணில்நம் மிடமொன்றும் வந்துநில் லாது-மதி
  159
  மெய்கையி லேதருஞ் சோதி-செய்யும்
செய்கைகளை நீ தினம்பரி சோதி-மதி
  160
  தர்மத்தைப் பாவம்வெல் லாதே-துட்ட
காமத்துக் கஞ்சிக் கலங்கிநில் லாதே-மதி
  161
  அகந்தைகள் செய்யப் படாதே-பிறர்
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் புண்யம்வி டாதே-மதி
  162
  நற்குரு வேமனச் சாட்சி-அதன்
சொற்படி நடந்தாற் சுகநிலை யாட்சி-மதி
  163
  மேலழ கேகுண வழகு-வெறுந்
தோலழ காலென்ன சுகுணத்திற் பழகு-மதி
  164
  உத்தம குணமேயா பரணம்-தங்கக்
கொத்து நகைகளெல்லாங் கோதையே திரணம்-மதி
  165