பக்கம் எண் :

32

  கீர்த்தனைகள்
  பெண் பார்க்கத் தூதனுப்புதல்
  உசேனிராகம்] [ஆதிதாளம்
  பல்லவி
  நல்லபெண்ணைப் பார்நீ தூதா (நல்ல)
  அநுபல்லவி
  அல்லடா கேளிந்தப் பூமியின் மேலே
ஆயிரங் காலத்துப் பயிராகை யாலே
(நல்ல)
  சரணங்கள்
  அதிகபேச்சுக்காரி பெரும் வம்பி
   ஆயிரமானாலும் அவள்வேண்டாந் தம்பி
நிதநித மூரெல்லாம் நீட்டுவாள் கம்பி
   நிச்சய மவளாகாள் நீயென்சொல்
  (நல்ல) 1
  எழுத்துவா சகம்அறி யாதவள் மட்டி
   ஏதுமறி யாதவள் சுரண்டுவாள் சட்டி
கழுத்திலே யவளுக்குத் தாலியைக் கட்டிக்
   காரிய மிலைஅது காசுக்கு நட்டி
  (நல்ல) 2
  அழகுங்கு ணமுமுள்ள வள்நல்ல சோடு
   அழகில்லை யாயினுங் குணத்தையே தேடு
பழகுநற் குணமில்லா அழகியின் வீடு
   பாம்பு புலிகரடி வாழ்ந்திடுங் காடு
  (நல்ல) 3