பக்கம் எண் :

34

  தூதன் பெண் பார்த்துவந்து சொல்லுதல்  
  சகல காரியங்களுந் தெரிந்தவள் சலாக்யம்
தரித்திர தசையிலு மவள்பெரும் பாக்கியம்
இகபர மிரண்டுக்கு மவள்நல்ல யோக்கியம்
என்று சொன்னான்வேத நாயகன் வாக்யம்
  (நல்ல) 10
 

தூதன் பெண் பார்த்துவந்து சொல்லுதல்

  சௌராஷ்டிரராகம்]  [அடதாளசாப்பு
  பல்லவி
  பஞ்சவர்ணக் கிளிபோ லொருபெண்ணை நான்
பார்த்து வந்தேன் சுவாமி
  அநுபல்லவி
  கொஞ்சமுஞ் சந்தேக மில்லாமலே அந்தக்
கோல மயிலைநீர் கொள்ளும்-அநு
கூலம் வந்ததென்று துள்ளும்-நல்ல
காலங் கவலையைத் தள்ளும்
 
(பஞ்ச)
  சரணங்கள்
  பூரணச் சந்திரன் போலுமு கத்துக்குப்
பூமியி லுண்டோச மானம்-தெய்வப்
பூவையர் சுந்தரம் வேண்டில் அவளிடம்
போய்வாங்க வேண்டுமே தானம்-அந்த
நாரிகண் வாய்செவி மூக்குக்கு வமையை
நாட்டுவ துமதி யீனம்-அவள்
நடையழ குக்குஞ்ச டையழ குக்குமே
நானென்சொல் வேனுப மானம்-அந்த
மானின்சொல் லோதேவ கானம்-இடை
தானுண்டென் பதனு மானம்-நாறு
மீனங்கண் ணெனிலவ மானம்
  (பஞ்ச) 1