| தங்களைப் படிப்பிக்கும்படி பெண்கள் வேண்டுதல் |
| சுந்தரி சீலம்விஸ் தாரம்-உமக் கந்தமின் னேநல்ல தாரம் |
| (பஞ்ச) 9 |
| பாயும்ப டுக்கையு மாகநோய் கொண்டாலும் பர்த்தாவே லைக்குப்பின் வாங்காள்-உந்தம் பக்ஷமொன் றேகோடி லக்ஷமென் றேயெண்ணிப் பலதுன்பம் வந்தாலும் ஏங்காள்-பெற்ற தாயும், பிதாவும் நிகர்வேத நாயகன் தாமரைப் பாதத்தை நீங்காள்-நல்ல சத்யநி ரந்தரை; புத்தியின் மந்திரி: சட்டக் குடித்தனப் பாங்காள்-வேலை முட்ட முடியுமுன் றூங்காள்-என்றுங் கெட்டவ ளென்றுபேர் வாங்காள்-உமக் கிட்டமுள் ளாள்; பழி யோங்காள் |
| (பஞ்ச) 10 |
| தங்களைப் படிப்பிக்கும்படி பெண்கள் வேண்டுதல் |
| ராகம் - நாதநாமக்கிரியை] | [தாளம் - ஆதி |
| பல்லவி |
| வித்தையைப் படிப்பியுங்கள்-தயைசெய்து வித்தையைப் படிப்பியுங்கள். |
| அநுபல்லவி |
| உத்தம வான்களே சத்தியபி மான்களே உங்கட்குக் கண்களான பெண்களா மெங்களுக்கு |
| (வித்தை) |
| சரணங்கள் |
| திருத்தமா வேலைகளெல் லாமுடிப்போம்-வேலை தீர்ந்தபின் புத்தகங்க ளேபடிப்போம் |