6 |
| | அறிஞர் கருத்துக்கள் | | இனிய கவர்ச்சியான தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தின் பெயரைப் போலவே யாருடைய முன்னேற்றத்திற்காக எழுதப்பட்டதோ அப்பெண் மக்களுடைய சிந்தனையில் எளிதாகப் படும் வண்ணம் அமைந்துள்ளது. ஆசிரியரின் சொல்லோவியங்கள் இளம் பெண்களின் உள்ளங்களில் உணர்ச்சி யூட்டுவனவா யுள்ளன. அவர்கட்கு அறிவுரை கூறும் முறையானது அவர்களின் ஒழுக்கங்களைச் சீர்படுத்தி, அவர்கள் வாழ்க்கையைச் சிறப்படையச் செய்யும்.............கல்விப் பயிற்சியூட்டும் தன்மை நிறைந்து விளங்கும் இந்நூல் நல்லொழுக்கங்களின் தன்மைகள் படிய வேண்டிய இளம் பெண் குழந்தைகட்கு அவசியமானதென்பதை குழந்தைகள்பால் அன்புடைய பெற்றோர் யாவரும் கருதவேண்டியதாகும். 'இந்து' 24-7-1912. இந்தப் புத்தகங்களைப் படிப்பதால் உலக நடையையும், நல்ல குணங்களையும், நல்ல பழக்கத்தையும் யாவரும் அடையலா மென்று நான் சொல்வது மிகையாகாது.டாக்டர் உ. வே. சாமினாதையர். | | |
|
|