8 |
| | வேதநாயகம் பிள்ளை வரலாறு | | பிறப்பு | | செந்தமிழ் நாடும், பைந்தமிழ் மொழியும், நந்தம் நனி நாகரிகமும் சீரும் சிறப்பும் பெற்று முந்துநிலை எய்த அருளால் வந்து தோன்றிய மாபெரும் புலவர்கள் பலர். அவர்களுள் இப்பெரியாரும் ஒருவர். இவர் பிறந்த திருவூர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையிலுள்ள குளத்தூர். அங்கு வேளாண் வாழ்க்கையும், தாளாண்மையும், நற்குடிப்பிறப்பும், பழியஞ்சிப் பாத்துண்டலும், வடுவஞ்சி வாய்மொழிதலும், நடுநிலை கோடாமையும், அன்பும் அறனும், இன்பு மீகையும் ஒருங்கமைந்த சவரிமுத்துப்பிள்ளை யென்னும் தக்கார் ஒருவர்க்கும், அவர் தம் கற்பிற் சிறந்த வளத்தக்க வாழ்க்கைத்துணையும், மனைமாண்பும், சோர்வின்மையும், தெய்வ நாட்டமும் வாய்ந்த ஆரோக்கிய மரியம்மாள் என்பவருக்கும் தவப்பேற்றால் உலகுய்ய அருளால் ஓர் ஆண்மகவு தோன்றிற்று. அம்மகவுதான் நம் அருமை வேதநாயகம்பிள்ளை யென்னும் செம்புலச் செல்வர். அவர் தோன்றிய நன்னாள் ஆயிரத்து எண்ணூற்றிருபத்தாறாம் ஆண்டு அக்டோபர் பதினான்காம் நாள். | | கல்வி | | இவர்கள் முன்னோர் கிறித்துவ நெறியைப் பின்பற்றுபவர்கள். ஆயினும், நம் பிள்ளையவர்கள் நெறிப் | | |
|
|