| 	 கொண்டு உட்கார்ந்துவிட்டாள் அவள்.                   விமானம் ஏதோ  ஒரு நிலையத்தில் இறங்கியது. ‘கோத்தபாரு ஏர்போர்ட்’     என்ற எழுத்துக்கள் தரையில் தெரிந்தன. அந்த விமானம் கோத்தபாரு,     குவாந்தான், கோலாலும்பூர், ஈப்போ ஆகிய இடங்களில் எல்லாம் இறங்கிக்     கடைசியாகத்தான் பினாங்கு போகுமென்று தெரிந்தது. மெல்ல இருட்டிக்     கொண்டு வந்த அந்த மருள் மாலைப் பொழுதில் அந்த நிலையமும், சுற்றி     மலைகளின் பசுமையும் மிக அழகாயிருந்தன.                எங்குப் பார்த்தாலும் மரகதப் பசுமை மின்னியது. மலைகளுக்குக் கர்லிங்     வைத்துக் ‘கிராப்’ வெட்டி விட்டாற்போல் எங்கு பார்த்தாலும் ரப்பர்த்     தோட்டங்கள், வாழைகள், ரம்புத்தான் மரங்கள், வானளாவிய காடுகள்     நிறைந்திருந்தன. ரம்புத்தான், டொரியான் போன்ற மலேயாவின் பழங்களைப்     பற்றி ஊரிலேயே ஒரு செட்டிநாட்டு நண்பனிடம் கேள்விப்பட்டிருந்தான்     முத்துக்குமரன். உருவி விட்டது போல், முன் பக்கமும் பின் பக்கமும்     வித்தியாசம் தெரியாத ஒரு மலாய்க்காரி - அந்த விமானத்தின் ஹோஸ்டஸ்  -     கேபினுக்கும் - வால் பக்கத்துக்குமாக டிரேயோடு போய் வந்து     கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் மட்டும் வெள்ளை வெல்வெட்     துணியில் கருநாவற் பழத்தை உருட்டினாற்போல் அழகாயிருந்தன.                விமானம் அந்த நிலையத்திலிருந்து புறப்பட்டுவிட்டது. மறுபடி கோபால்     மட்டும் தனியே அவர்கள் இருந்த இடத்துக்கு வந்தான்.                ‘‘நீ செய்யிறது உனக்கே நல்லாயிருந்தாச் சரி மாதவி.’’                   கண்களைத் துடைத்துக்கொண்டு ஸீட் பெல்ட்டை அவிழ்த்துவிட்டு     எழுந்து நின்றாள் அவள். இம்முறை முத்துக்குமரனைக் கேட்காமலே, அவன்     முகத்தை ஏறிட்  	 |