பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி267

கோபால் அவளை வேண்டினான். மாதவி தயங்கினாள்.

     ‘‘நீ ஆளே மாறிப்போயிட்டே! முன்னே மாதிரி இல்லே’’ என்று
அவளுடைய தயக்கத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னான்
கோபால். அவள் அதற்கு மறுமொழி கூறவில்லை. கோபால் சிரித்துக்
கொண்டே உள்ளே போய்விட்டான்.

     ‘‘அவன் ஏன் சிரிக்கிறான்...?’’ முத்துக்குமரன் அவளைக் கேட்டான்.

     ‘‘நான் ரொம்ப மாறிட்டேனாம்?’’

     ‘‘வீட்டுக்குப் போகணுமா? இங்கேயே தங்கறியா? ரொம்ப நேரமாச்சே?’’

     ‘‘தங்கலாம்! ஆனா உங்க அவுட்ஹவுசிலே ஒரு மூலையிலே
இடங்கொடுத்தீங்கன்னாக்கூடப் போதும். மத்த எந்த இடத்திலியும் இந்தப்
பங்களாவிலே தங்க முடியாது. இது ஒரு பிசாசு வீடு மாதிரி. சிங்கப்பூரிலே
நேத்துக் காட்டினீங்களே நரகத்தில் நடக்கும் குரூரங்களை, அதை மறுபடியும்
நினைச்சக்குங்க...’’

     அவுட் ஹவுஸ்லே ஒரே கட்டில்தானே இருக்கு. தரை ஜில்னு
இருக்குமே?’’

     ‘‘பரவாயில்லே! உங்க காலடிலே கீழே தரையோரமா கொஞ்சம் இடம்
கொடுங்க போதும்.’’

     அவள் பின்தொடர அவன் அவுட்ஹவுஸை நோக்கி நடந்தான். அன்று
அவர்கள் எல்லாம் சிங்கப்பூரிலிருந்து திரும்புகிற செய்தியறிந்து நாயர்ப்
பையன் அவுட்ஹவுஸைப் பெருக்கிச் சுத்தப்படுத்திப் பானையில் தண்ணீர்
எடுத்து வைத்துப் புதிய தலையணை விரிப்புகள் எல்லாம் போட்டுப்
படுக்கையையும் சுத்தமாக விரித்து வைத்துவிட்டுப் போயிருந்தான்.

     அவர்களோடு வந்த சூட்கேஸ்கள் எல்லாவற்றையும் தனித்தனியே
பிரித்து மாதவிக்கும் முத்துக்குமரனுக்கும் உரியவற்றை அவுட்ஹவுஸ்
வராண்டாவில் டிரைவர் ஏற்கெனவே கொண்டுவந்து வைத்திருந்தான்.
இருவரும்