பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி45

நண்பனின் செய்கைக்கு ஆத்திரப்படுவதா அன்பு கூறுவதா என்று புரியாமல்
மீண்டும் குழம்பினான் முத்துக்குமரன். ‘தன்னிடம் பணம் இருக்கிறதென்ற
முத்துக்குமரன். ‘தன்னிடம் பணம் இருக்கிறதென்ற திமிரில் தானே இப்படிக்
கொடுத்தனுப்புகிறான்’ ...என்பதாக நினைத்தபோது கோபமும்... ‘பாவம்! நான்
சிரமப்படப் போகிறேனே என்ற எச்சரிக்கையுணர்வோடு குறிப்புணர்ந்து
கொடுத்தனுப்பி இருக்கிறான்’...என்பதாக நினைத்த போது வியப்பும் அன்பும்
மாறி மாறி உண்டாயின. தங்க இடம், உண்ண உணவு, நாடகம் எழுத வசதிகள்,
எல்லாம் செய்து கொடுக்கப்பட்டு விட்ட பின் தனக்குப் பணம் தேவை இல்லை
என்றாலும்... திருப்பிக் கொடுத்தனுப்பினால் நண்பனுடைய மனம் புண்படுமே
என்ற தயக்கம் முத்துக்குமரனுக்கு ஏற்பட்டது. உடனடியாக தேவை இல்லாத
ஒரு காகிதக் கற்றையை டிராயருக்குள் திணிப்பது போல் மேஜை டிராயரில்
அந்த உரையையும் கடிதத்தையும் பணத்தோடு எடுத்துப் போட்டு வைத்தான்
அவன். மனமோ நண்பனுக்கு எழுதிக் கொடுக்க வேண்டிய நாடகத்தைப்பற்றிச்
சிந்திக்கத் தொடங்கியது. சென்னையைப் போன்ற ஒரு பெரிய கஸ்மாபாலிடன்
நகரத்தில் - கோபாலைப் போன்ற புகழ்பெற்ற நடிகன் ஒருவன் தயாரித்து
அளிக்கிற தான் எழுதும் நாடகம் எத்தனை பெருமைக்குரியதாக அமைய
வேண்டுமோ அத்தனை பெருமைக்குரியதாக அதை அமைக்க வேண்டுமென்ற
தீர்மானம் முதலில் அவனுக்குள் ஏற்பட்டது. மதுரை கந்தசாமி நாயுடுகாருவின்
சபைக்கு எழுதிக் கொடுத்த பழைய பாலவிநோத நாடகங்களுக்கும், இப்போது
எழுதப்போகிற இந்த நாடகத்துக்கும் என்னெண்ண வித்தியாசங்கள் இருக்க
வேண்டும் என்பதை முதலில் அவன் சிந்தித்தான். உத்தி, அமைப்பு,
உரையாடல், சம்பவக் கோவை, நகைச்சுவை எல்லாவற்றிலுமே பட்டினத்திற்கும்
காலத்திற்கும் ஏற்ற முறையில்