பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி77

     ‘‘நீங்கள் எழுதும் வசனங்களைவிடப் பேசும் வசனங்கள் மிகவும்
நன்றாகயிருக்கின்றன...’’

     ‘‘அது கலை! இது வாழ்க்கை! கலையைவிட வாழ்க்கை அழகாகவும்,
சுபாவமாகவும் இருப்பது இயல்புதானே?’’

     பேசிக்கொண்டே இருவரும் புறப்பட்டார்கள். மாதவியின் வீட்டில் இரவு
விருந்திற்கு மலையாளச் சமையல் பிரமாதமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.
தேங்காய் எண்ணெய் மணம் கமகமத்தது. நடுக்கூடத்தில் பொருத்தி
வைத்திருந்த சந்தன வத்தியின் நறுமணமும், மாதவியின் கூந்தலில் சூடியிருந்த
மல்லிகைப் பூ மணமும், சமையலின் வாசனையுமாகச் சேர்ந்து அந்த சிறிய
வீட்டிற்குத் திருமண வீட்டின் சூழ்நிலையை உண்டாக்கியிருந்தன.

     டைனிங் டேபிள் எளிமையாகவும் அழகாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தான் பரிமாறுவதாகக் கூறி அவர்கள் இருவரையுமே சாப்பிட உட்கார வைத்து
விட்டாள் மாதவியின் தாய்.

     டைனிங் டேபிளில் மாதவியின் தாய் பறிமாறிக் கொண்டிருந்த போது -
ஹாலின் சுவரில் மாட்டியிருந்த படங்களை நோட்டம் விட்டான் முத்துக்குமரன்.
எல்லாப் படங்களையும் விட ஒரு படம் அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு
நேர் எதிரே நிமிர்ந்தால் உடனே பார்வையிற்படுகிற விதத்தில் இருந்தது.
அந்தப் படத்தில் நடிகன் கோபாலும் மாதவியும் சிரித்துக்
கொண்டிருப்பதுபோல் ஏதோ ஒரு திரைப்பட ‘ஸ்டில்’ பிரேம் போட்டு
மாட்டப்பட்டிருந்தது. முத்துக்குமரனின் பார்வை அடிக்கடி அந்தப் படத்தின்
மேலேயே செல்வதைக் கண்டு மாதவிக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அவன்
மனத்தில் அநாவசியமாக ஏதேனும் சந்தேகம் எழக்கூடாது என்று விளக்கக்
கருதியவளாக, ‘‘மணப்பெண் என்ற சமூகப் படத்தில் கதாநாயகிக்குத்
தோழியாக நான் உபபாத்திரத்தில்