பக்கம் எண் :

மனோன்மணீயம்
139

வழுவெனக் கண்டது மாற்றினன். அநேக
வந்தனம் வந்தனம்! ஆயினு மொருசொற்
சிந்தையிற் சேர்த்தெனைத் தெருட்டிட வேண்டும்.

60.

வேற்றுமை யுருவாய் விளங்கிய காலங்
காற்றினுங் கடுகிய கடுநடை யுடைய
தன்றோ? அதிலகப் பட்டார் முந்திச்
சென்றா னின்றார்! சிறிதுசிந் தித்து
நிற்பரேற் பெரிதும் பிற்பட் டொழிவர்.

65.

ஆதலா லடிகாள் பூதலத் துயர்ந்த
மேதையின் மிகுத்த மானிடர்க் கரசராய்
வந்தவர், தந்தமக் குற்ற மதித்திற
மெட்டிய மட்டுங் குற்றம் விடுத்துக்
கால கதிக்கனு கூலமாய் நவீன

70.

சீர்பல திருத்தி யோரியல் புதிதா
நாட்டித் தமது நாட்டுளோர் சுகம்பா
ராட்டில ரேலவ ராண்டநாட் கெல்லை
காட்டுமோ கொடிய காலப் கரப்பே!
இவ்வழி தனக்கெனத் துணிந்ததோ ரியல்பே

75.

யவ்வர சனுக்காம் யாக்கை. அஃதின்
அழிவே யவன தொழிவாம். அதனால்
எல்லா மறிந்த விறைவ! இவ் விடத்தியான்
பல்லா யிரநாட் பரிவுட னுழைத்தே
அமைத்தவிப் புரியுஞ் சமைத்தவிவ் வரணும்

80.

நன்றே யாயினு மாகுக : அன்றிப்
பொன்றினும் பொன்றுக : பொறித்தவென் னரசியல்
மற்றவை தம்மொடு மாண்டிடும் : மாண்டபின்
அற்றதோர் கவந்தம் அமர்க்களத் தாடு்ம்
பெற்றிபோல் மூச்செறி பிணமா யானும்

85.

நடித்தலோ வுன்றிரு வடித்தா மரையைப்
பிடித்ததற் கழகாம் பேசாய் விடுத்தே!


சுந்தர,

எடுத்ததன் முயற்சி யாதே யாகுக!
முடித்திடு முன்ன ரடுத்ததன் மதியாற்
றீங்கெனத் தேர்ந்திடி னாங்கவற் றுட்பின்

90.வாங்கலே யார்க்கு மாம்பணி யென்ப.