(திரைக்குப்பின் மறைந்து நிற்க.)
என்குலங் காக்க வெனவருள் பழுத்துக்கங்கணங் கட்டிய கருணா நிதிகாள்!மனத்திறத் தாழ்ந்த மதிமந் திரிகாள்!எனக்கென வுயிர்வா ழென்படை வீரர்காள்!ஒருமொழி கூறிட அனுமதி தருமின்.
ஆடையின் சிறப்பெலா மணிவோர் சிறப்பே ;பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே ;எள்ளரு மதிகுலச் சிறப்பெலா மெமர்காள்!கள்ளமில் நும்முனோர் காப்பின் சிறப்பே,ஆதலி லுமக்குப சாரம்யா னோதுதல்,
மெய்க்குயிர் கைக்குநர விளம்புதல் மானும்.ஈண்டுகாத் திடுவல்யா மெனக்கடன் பூண்டநும்மதிகுல மருந்தாய் வாய்த்தவென் சிறுமிவிதைபடும் ஆலென விளங்கினள். அவளைக்காத்திடு முபாயங் கண்டிட விச்சபை
சேர்த்தன னென்பது தெரிவீர் நீவிர்.இன்றுநாம் பட்டதோ ரிழுக்கிவ் வைகறைபொன்றியோ வென்றோ போக்குவந் திண்ணம்.ஒருகுலத் தொருவ னொருமரத் தோரிலை.அப்படி யன்றுநங் கற்பகச் சிறுகனி!
தப்பிடின் மதிகுலப் பெயரே தவறும்.அரியவிச் சந்தியைப் பெரிதுங் கருதுமின்.இருந்திடச் சிறியள் : அபாயம்! தனியேபிரிந்திடப் பெரியள் : பிழை! அஃ தன்றியுங்குலமுடி வெண்ணிக் குலையுநம் முளத்திற்
கிலையத னாலோ ரியல்சமா தானம்.ஆதலி லரியதற் காலத் தியல்பையாதென நீவி ராய்ந்தியா னிப்போதோதிடு முபாயத் தாலுறு நன்மையுந்தீமையு நன்றாய்த் தெரிந்து செப்புமின்!
குடிலனை யறியார் யாரிக் கொற்றவை?