பக்கம் எண் :

மனோன்மணீயம்
15

25.மனோகர மாகய சினகர மொன்றில்
உலகுள பொருளெலா முய்ப்பினும் பின்னும்
நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை.
வசிட்டர் முன்னர் வாளாப் புகைத்தனர்
முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும்.
30.கௌசிக னிரக்கவோர் மௌலி வேந்தன்
பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்?
சிட்ட முனிவாக்ள் செயலாற் பலகால்
புரந்தரன் றனதுருக் கரந்து திரிந்தனன்.
முனிவரே யாயினும் மனிதரே மீண்டும்.
35.இச்சை யற்றவ ரிச்சகத்து யாவர்?
ஜீவ. ஒவ்வும் ! ஒவ்வுநீ யுரைத்தது முற்றும்.
நாராயணன். ஐயோ ! பாவி ! அருந்தவ முனிவரைப்
(தனதுள்) பொய்ய னாக்குவன், புரவல னோவெனில்
எடுப்பார் கைப்பிள்ளை. தடுப்பார் யாரோ?

(நேரிசை வெண்பா)

நாரா, கொல்லா யெனப் பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப்
(அரசனை நோக்கி)பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே - பொல்லா
வெறுமெலும்பை நாய்கௌவும் வேளைநீ செல்ல
வுறுமுவதென் நீயே யுரை.

(சேவகன் வர)

(நிலைமண்டில வாசிரியப்பா தொடர்ச்சி)

சேவகன். 40.மன்னிய கலைதேர் சகடர் வந்தனர்.
ஜீவ. வரச்சொல் சேவக !
(நாராயணனை 
நோக்கி)
               உரைத்தநின் னுவமையிற்
சற்றே குற்ற முள்ளது நாரணா !
குடில, (தனதுள்) அரசன் மாறாய்ப் பொருள்கிர கித்தனன்.
(அரசனை நோக்கி) வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற்