|
|
ரங்கி, என்னை மன்னித்ததாக ஒரு வார்த்தையாயினும்
எனக்கு நேராகக் கூறலாகாதா? மங்கையர்க் கரசியே !
இன்னும் நான் என்னசொல்வது? நான் உனது புருஷனா
தல்பற்றி, உனது சீர் தங்கிய பாதங்களில் வீழ்ந்து
வேண்டாத குறையொன்று தான்-அதுவும் செய்ய
வேண்டுமென்றால் செய்கிறேன்.
|
| ப.
|
விஜயா, மஹாராஜா இக் காரியம் செய்தல் தவறெனச்
சொல்லித் தடுத்துவிட்டு வா.
|
| வி.
|
மாமா, அப்படி செய்ய லாகாதென்று மாமி தடுக்கச்
சொன்னார்கள்.
|
| பு.
|
விஜயா, உன் புருஷனை நான் தூஷித்ததெல்லாம் நீயும்
மன்னிப்பாய் !
|
| வி.
|
சரிதான் மாமா.
|
| பு.
|
நீ கூறியபடி உனது மாமியும் என் மனங்குளிர அப்
படியே கூறலாகாதா?
|
| ப.
|
ஒரு அற்ப வேசியினுடைய மன்னிப்பு அவருக் கென்
னத்திற்கு?
|
| பு.
|
பத்மாவதி ! நான் இதுவரையில் என் துக்கத்தைப்
பொறுத்துப்பார்த்தேன், இனி என்னால் பொறுக்க
முடியாது ! பத்மாவதி, இதோ, கடைசி வார்த்தை
சொல்லுகிறேன். நான் செய்த குற்றங்களை யெல்லாம்
நீ மன்னித்ததாக இப்பொழுது கூறாவிட்டால் இதோ
உன் முன்பாகவே எனதுயிரை இவ்வுடைவாளுக்கு
இரையாக்குவேன். என்ன சொல்லுகிறாய்?-இனி நான்
தாமதியேன்.-பத்மாவதி ! இதோ நீயே என்னைக் கொல்
கிறாய் !
|
| ப.
|
பிராணநாதா ! - மஹாராஜா ! வேண்டாம் ! வேண்டாம் !
பொறும் ! நான் உம்மை மன்னித்தேன் ! மன்னித்தேன் !
|