இரண்டாவது காட்சி.
இடம்-யுத்தகளம், காலம்-பகல்.
சோழ சைனியங்கள் முறியடிக்கப்பட்டு ஓடுகின்றன.
மற்றொரு புறமாக புருஷோத்தமராஜன் பாண்டிய சைனியங்களால்
துரத்தப்பட்டு ஓடிவருகிறார்.
|
பு.
|
அடே !
வீரர்களானால் ஒருவன் ஒருவனாகச் சண்டை
செய்யுங்கள் !
|
பா.சை.
|
அடே !
இவரெ அல்லாருமா சேர்ந்து கொண்ணுட்டா
தாண்டா சரி ! [புருஷோத்தம ராஜன் பாண்டியர்
களால் எதிர்க்கப்பட்டு தன்னாலி
யன்ற அளவு யுத்தம் புரிந்தும்
கடைசியில் காலில் வெட்டப்
படுகிறார். ]
|
பு.
|
மனோஹரா ! மனோஹரா !
[ கீழே விழுகிறார். ]
மாறுவேஷத்தில் மனோஹரன் பௌத்தாயனன், சத்தியசீலர்,
ராஜப்பிரியன், சைனியங்களோடு விரைந்து வருகிறார்கள்.
|
ம.
|
இதோ ! வந்தேன் ! [ புருஷோத்தம ராஜனை
எதிர்த்த
வரை வெட்டித் தள்ளி அவரைக்
காப்பாற்றுகிறான். பாண்டிய
சைனியங்கள் ஓடிப் போகின்றன. ]
அப்படியே இரண்டு பெயராகப் பாசறைக்கு எடுத்துச்
செல்லுங்கள் சீக்கிரம் !
|
பௌ.
|
இன்னும்
உயிரிருக்கிறது ! ஆயினும் மூர்ச்சையா யிருக்
கிறார் ! காயம்பட்டிருக்கிறது ! ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !
[ சத்தியசீலரும் ராஜப் பிரியனும்
மூர்ச்சையா இருக்கும் அரசனை
அப்படியே தூக்கிக் கொண்டு
போகிறார்கள். ]
|
ம.
|
சோழர்களே !
வாருங்கள் ! வாருங்கள் ! ஓடுகிறார்கள்
பகைவர்கள் !
|