பக்கம் எண் :

117

மகா---ஸ்ரீ ச. திருமலைவேலுக் கவிராயரவர்கள் குமாரர் மகா---ஸ்ரீ
சங்குக்கவிராயர் இயற்றியது.
----------

விருத்தம்.

முத்தமிழு ண்டுத்தமிழா மிசைத்தமிழி னிலக்கண நூன் முடிவை யெல்லாஞ்
சித்தமகிழ் வுற்றுமிக புத்தியனு பவத்தினாற் றேர்ந்து நன்றாய்ப்
புத்தமுத வாசகமா வரைந்துலகெங் கணும்விளக்கிப் புகழ்பெற் றானா
லெத்திசையும் புகழ்ந்துரைக்குந் தஞ்சைநக ராபிரகா மெனுமே லோனே.

பஞ்சகா வியத்துளொன்றாஞ் சிலப்பதிகா ரக்கவிகள் பயின்மேற் கோளா
வெஞ்சலிலா வகையெடுத்துக் காட்டியிசை யிலக்கணமு மெடுத்துக் காட்டித்
தஞ்சைநக ராபிரகாம் வள்ளல்புரி சங்கபிர சங்க மோர்ந்து
மிஞ்சியமுத் தமிழ்வலரு மிகவியந்தா ரெவரதனை வியவா தாரே.

பதமுறுநந் தமிழ்நூலிற் பகருமிசை யிலக்கணத்தைப் பார்த்தே மின்றி
யிதுவரையவ் விதிப்படியே பாடினா ரொருவரையு மீங்குக் காணேஞ்
சததளமா மலர்த்தடஞ்சூழ் தஞ்சையா பிரகாம்வித் தாரன் பெற்ற
புதல்வியரவ் விதிப்படியே பாடினா ரற்புதமற் புதமீ தம்மா.

-------------------------------