பக்கம் எண் :

20
கருணாமிர்த சாகரம். முதல் புஸ்தகம்.முதல் பாகம். இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்.

3. துவாரகைக்கரசனாகிய கிருஷ்ணபகவானும் ஜலப்பிரளயமும்.

பாகவதம், பதினோராவது ஸ்கந்தம், 30-ம் அத்தியாயம்.

ஸ்ரீ பகவான் வாக்கியம்.

"வாராய்சாரதி! நீ துவாரகாபட்டணத்துக்குப் போய், பந்துக்களுக்கு யாதவர்கள் ஒருத்தருக்கொருத்தர் யுத்தம் பண்ணி அடிபட்டுப் போனதையும், யோகமார்க்கத்தினால் பலராமர் பரமபதத்தையடைந்ததையும், நான் இச்சாசரீரத்தை விட்டுவிட்டதையுஞ் சொல்லக்கடவாய். பந்துக்களோடே கூடிக்கொண்டிருக்கிற நீங்கள் துவாரகையிலிருக்க வேண்டாம். என்னால் விடப்பட்டிருக்கிற இந்தத் துவாரகாபட்டணத்தைச் சமுத்திரமானது முழுகிப்போனதாகப் பண்ணப்போகிறது. ஆகையினால் நீங்கள் சமஸ்தமான பேர்களும் அவாளவாள் பந்து ஜனங்களையும் நம்முடைய மாதா பிதாக்களையும் அழைத்துக் கொண்டு அர்ச்சுனனாலே ரக்ஷிக்கப்பட்டவர்களாய் இந்திரப்பிரஸ்தத்தைப் போயடையுங்களென்று பந்துக்கள் பொருட்டுச் சொல்லக்கடவாய்."

பாகவத வசனம், ஸ்கந்தம், 31-ம் அத்தியாயம்.

ஸ்ரீ சுகர் வாக்கியம்.

"வாராய்மகானுபாவனே! அந்தக்ஷணத்தில் சமுத்திரமானது ஸ்ரீ கிருஷ்ணனுடைய கிரகத்தை விட்டுவிட்டு அவரால் விடப்பட்டிருக்கிற துவாரகாபட்டணம் சமஸ்தத்தையு முழுகப் பண்ணியது.

* * * * * * * * * * *

"பிற்பாடு அர்ச்சுனனானவன் அசேஷர்களாயிருக்கிற பாலவிருத்தர்களை யழைத்துக் கொண்டு இந்திரப்பிரஸ்தத்தை வந்தடைந்து, அவ்விடத்தில் வச்சிரனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணி வைத்தான்."

பாகவத வசனம் பன்னிரண்டாவது ஸ்கந்தம், 2-ம் அத்தியாயம்.

"எப்போது பகவனான ஸ்ரீ விஷ்ணுவினுடைய அம்சமாயும் சத்துவசொரூபமாயுமுள்ள தேகமானது ஸ்ரீ வைகுண்டத்தையடைந்ததோ, அப்போதே கலியானதுண்டானது. ஸ்ரீ லட்சுமிபதியான ஸ்ரீ கிருஷ்ணரானவர் தம்முடைய பாதபத்மங்களால் ஸ்பரிசித்துக்கொண்டு பூமியிலிருந்தவரையில் அந்தக் கலியானது பூமியை ஆக்கிரமிக்கைக்குச் சமர்த்துள்ள தல்லாமற்போயிற்று."

மேலே பாகவதத்தினின்றும் எடுத்துக் காட்டிய சில பாகங்களினால், துவாபர யுகத்தின் கடைசியில் கிருஷ்ணபகவானிருந்ததாகவும், துவாரகையும் அதைச் சேர்ந்த இடங்களும் ஜலப்பிரளயத்தில் அழிந்து போகப் போவதையறிந்து அதில் தம் ஜனங்கள் அழிந்து போகாதபடி அர்ச்சுனனுக்கு முன்னெச்சரிக்கை செய்து தமது பின்னடியார்களை இந்திரப்பிரஸ்தம் அல்லது தற்காலத்தில் டில்லி என்றழைக்கப்படும் பட்டணத்திற்குக் கொண்டுபோய்க் குடியேற்றச் சொன்னதாகவும், அப்படியே அர்ச்சுனன் இந்திரப்பிரஸ்தத்திற்குப் போய் அவ்விடத்தில் வச்சிரனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்ததாகவும், கிருஷ்ணபகவானுடைய தேகம் மறைந்தவுடன் கலியுகம் உண்டானதாகவும் தெரிகிறது. இற்றைக்கு 5014 வருஷங்களுக்கு முன் கலியுகம் ஆரம்பித்ததென்று சாதாரணமாய் நாம் யாவரும் அறிவோம். துவாரகாபட்டணமோ (Dwaraka) இந்தியாவின் மேல்பாகத்தில் ஸிந்து (Indus) நதியின் முகத்துவாரத்துக்குச் சமீபத்திலுள்ள கச் (Cutch) நாட்டின் தென்புறமாய் கத்தியேவாரின் (Kathiawar) மேல்கோடியில் கடல் ஓரமாயிருக்கிறது. கச் நாடும் கத்தியேவாரின் பெரும்பாகமும் ஜலப்பிரளயத்தால் ஒருகாலத்தில் மிகவும் அழிக்கப்பட்டிருக்கின்றனவென்று திட்டமாய்த் தெரிகிறது. இந்தக் கத்தியேவாருக்குச் சமீபத்திலுள்ள கச் (Gulf of Cutch) குடாவும் அரபிக்கடலைச் சேர்ந்த பாரசீகக் (Persian Gulf) குடாவும் ஆதேன் (Gulf of Aden) குடாவும், செங்கடலும் (Red Sea) ஒருகாலத்தில் இந்தியாவின் தென்பாகத்திலுண்டான பூமிமாறுதலால் தங்களுக்கு எதிர்ப்பட்ட தாழ்ந்த பூபாகங்களை அழித்துவிட்டன