வென்று நாம் நினைக்க இடந்தருகிறது.பூமியின் நடுப்பாகத்தில் அக்கினியிருக்கிறபடியால், அவ்வக்கினி உஷ்ணம் மிகுந்த சில பாகத்தின் வழியாக பூமிக்குச் சமீபித்துப் பூமியின் மேற்பரப்பை மேடுபள்ளமாக்கிச் சமுத்திரத்தைத் தரையாகவும் தரையைச் சமுத்திரமாகவும் மாற்றிவைக்கிற இயற்கையை அனுசரித்து, அரபியா (Arabia) இந்தியா (India) பர்மா (Burma) முதலிய தேசங்களுக்கு எதிரிலுள்ள பூமியின் பெரும்பாகங்கள் ஜலப்பிரளயத்தால் விழுங்கப்பட்டிருக்க வேண்டுமென்று ஊகிக்க இடந்தருகிறது. துவாரகா பிரதேசம் அழிந்த காலத்திலேயே நோவாவின் காலத்து ஜலப்பிரளயமும் உண்டாயிருக்கலாமென்று நாம் ஒருவாறு நினைக்கலாம். இற்றைக்கு 4263 வருஷங்களுக்கு முன்னுண்டானதென்று சொல்லப்படும் பிரளயமும் 5000 வருஷங்களுக்கு முன்னுண்டானதென்று சொல்லப்படும் பிரளயமும் காலவித்தியாசமாய்ச் சொல்லப்படுகிறதே தவிர, மற்றப்படி ஒரேகாலத்தில் நடந்ததாக நினைக்க ஏதுவிருக்கிறது. தென்னிந்தியாவுக்குத் தென்பாகத்திலிருந்த 49 நாடுகளும் அதன் முக்கிய நகரமாகிய தென்மதுரையும் கடலால் அழிக்கப்பட்டனவென்று பூர்வ தமிழ்நூல்களினால் புலப்படுகிறது. 4. தென்னிந்தியாவிலுள்ள ஆவிடையார்கோயிலும் ஜலப்பரிளயத்துக்குத் தப்பிய 300 சோழியப் பிராமணர்களும். இக்காலத்தில் மிகவும் நேர்த்தியான சிற்பவேலைகளுள்ளதாக எண்ணப்படும் ஆவிடையார் கோயிலில் நடந்த சில காரியங்கள் இந்தியாவில் சுற்றுப் பிராயாணம் செய்யும் பிரயாணிகளுக்கு ஞாபகமிருக்கலாம். South Indian Railway Illustrated Guide 1913. "In the village of Avudyarkoil is an ancient temple which though small, is considered one of the most perfect specimens of its class in Southern India. According to legends the temple occupies the site where, after the deluge, Siva with a colony of three hundred disciples called Solias was established for the purpose of porpagating the Brahmin Religion." "ஆவிடையார்கோயிலிலிருக்கும் பூர்வமானகோயில் சிறிதாயிருந்தாலும் தென்னிந்தியாவிலுள்ள கோயில்களுள் மிகவும் முக்கியமான சிற்ப வேலைப்பாடுகளுள்ளவைகளில் முதன்மையானது. ஆலயம் இப்போது இருக்குமிடத்தில், ஜலப்பிரளயத்திற்குப்பின் சோழியர்கள் என்று அழைக்கப்படுகிற முந்நூறு பெயர்களை அங்கே கொண்டுவந்து, பிராமணமதத்தை விருத்தி பண்ணும்படியாக, சிவன் குடியேற்றினாரென்று புராணங்களில் சொல்லப்படுகிறது." இதைக் கவனிக்கும்பொழுது, இந்தியாவின் தென்பாகம் ஒருகாலத்தில் கடலால் விழுங்கப்பட்டிருக்க வேண்டுமென்றும், துவாரகையிலிருந்து இந்திரப் பிரஸ்தத்துக்கு உயிர் தப்ப ஓடிப்போனவர்களைப்போல இத்தென்பாகத்திலிருந்தவர்களும் தங்களுக்குச் சமீபத்திலுள்ள உயர்ந்த இடங்களுக்கு உயிர்தப்ப ஓடிப்போய்க் குடியேறினார்களென்றும் சொல்ல ஏதுவிருக்கிறது. 5. ஜலப்பிரளயத்தினால் விழுங்கப்பட்ட இடங்களும் பிரளயகாலத்தின் கணக்கும். இப்படி ஜலத்தினால் விழுங்கப்பட்ட பிரதேசங்களின் சிலபாகம் ஒருவாறு கடலால் விடப்பட்டுப் பின் ஜனங்களின் குடியிருப்புக்குத் தகுதியாயிற்றென்று நினைக்க வேண்டும். செங் கடலுக்குப் பக்கத்திலுள்ள ஆப்பிரிக்காவின் (Africa) சிலபாகமும் அரபியாவும் ஆசியாத்
|