பக்கம் எண் :

36
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

அதோடு நிலச் சம்பந்தம் பெற்ற ஆப்பிரிக்கா தென்னிந்தியா முதலிய பூபாகங்களில் காணப்படுவது இயற்கையே. பொதிகைமலையின் பக்கத்திலும் காவேரியாற்றின் பக்கங்களிலும் இருப்பதே அவைகள் மற்றத் தேசங்களிலிருந்து வரவில்லையென்பதைக் காட்டுகிறது.

Castes and Tribes of Southern India by E. Thurston Vol. I, Intro. P. XXIV.

"On the evidence of the very close affinities between the plants and animals in Africa and India at a very remore period, Mr. R. D. Oldham concludes that there was once a continuous stretch of dry land connecting South Africa and India."

"மிகப்பழமையான காலங்களில் ஆப்பிரிக்காவிலிருந்த ஸ்தாவரஜங்கமங்களுக்கும் இந்தியாவிலிருந்த ஸ்தாவரஜங்கமங்களுக்கும் இருக்கும் நெருங்கின ஒற்றுமையைக்கொண்டு, ஆர். டி. ஓல்ப்ஹாம் என்பவர், ஒருகாலத்தில் தென் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் ஒரே தொடர்ச்சியான பெருந்தரை இணைத்துக் கொண்டிருந்தது என்று தீர்மானிக்கிறார்."

மேற்கண்டவரிகளை நாம் கவனிக்கையில் லெமூரியாக்கண்டமும் தென் ஆப்பிரிக்காவும் வெகுகாலத்துக்கு முன் தொடர்ச்சியான பூகம்பந்தமுடையதா யிருந்ததென்று தெரிகிறது. லெமூரியா அழிந்தபின் ஆப்பிரிக்காவின் தென் பாகத்திலும் தென்னிந்தியாவிலும் காணப்படும் தாபரவர்க்கங்களின் ஒற்றுமையே இதற்குக் காரணமென்றுஞ் சொல்லுகிறார். இதைக் கொண்டு பப்பரப்புளி என்ற மரம் ஆப்பிரிக்காவிலிருந்து, கொண்டுவரப்படவில்லை, தென்னிந்தியாவிற்கேயுரிய மரமென்று தெளிவாகத் தெரிகிறது.

மேலும் பதினாயிர வருஷங்களுக்கு முன்னாலேயே எகிப்தியர்களிருந்தார்களென்றும், அவர்கள் தண்டசக்கரம் முதலிய யந்திரங்களின் உதவியின்றிக் கையினாலேயே மண்பாண்டங்கள் செய்தார்களென்றும் காண்கிறோம்.

Hutchinson's History of the Nations, Page 5.

Early Egyptians making pottery 10,000 years ago.

"The most abundant handwork of the early Egyptians was the finely made pottery entirely formed by hand. It was built up from the base and in form so true that no error is perceptible. The facing was finished with a coat of red haematite, which turned to a brilliant black in the furnace. It is interesting to note that the same materials are used in the same kind of patterns by the hill tribes at the back of Algeria at the present time."

ஆதி எகிப்தியர் 10,000 வருஷங்களுக்கு முன் மண்பாண்டங்கள் செய்தல்.

"ஆதி எகிப்தியர் அபரிமிதமாய்ச் செய்து வந்த கைத்தொழில் என்னவென்றால், வெகு நேர்த்தியாய் யந்திர உதவியில்லாமல் கையினால் செய்த மண்பாத்திர வேலையே, அடிமுதல் உருவத்தில் யாதொரு பிசகும் இல்லாமல் கையாலேயே அது செய்யப்பட்டது. சிவப்புச் செங்கல்பொடியினால் அதற்கு மேல் பூச்சுப்பூசப்பட்டது. இதை நெருப்பில் சுட்டவுடன் அந்தச் சிவப்பு கறுப்பு நிறமாய் மாறினது. இதில் விசேஷமாய்க் கவனிக்க வேண்டியது, அதே தளவாடங்களினால் அதேவித மட்பாத்திரங்கள் இப்போது அல்ஜீரியாவுக்குப்பின் பக்கத்திலுள்ள மலைவாசிகளால் செய்யப்படுகிறது என்பதே."

இதினால், இற்றறைக்குப் பத்தாயிர வருஷங்களுக்கு முன்னாலேயே மனிதர்களிருந்திருக்கிறார்க ளென்று தெரிகிறது. மேலும் அதற்கு நீண்டகாலம் முன்னாகவே பூர்வமாக மனிதர்களிருந்திருக்க வேண்டுமென்றும் இதைக் கொண்டு சொல்லலாம். ஏனென்றால், மனுஷர் உண்டானபின் அவர்கள் அடைந்திருக்கும் தேர்ச்சியைக் கொண்டு நாட்களைக் கவனிப்போமானால், முதல்முதல் காய்களையும் பழங்களையும் வித்துக்களையும் தேனையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த காலமென்றும்,