பக்கம் எண் :

138
தென்னிந்திய சங்கீதம் வேறு, வடஇந்திய சங்கீதம் வேறு என்பதைப்பற்றி.

The Music and the Musical Instruments of Southern India. C.R.Day, P. 15

"The exact definition of what constituted a sruti is difficult to determine; but it is thus vaguely given by the Sangita Ratnavali "A sruti is formed by the smallest intervals of sound and is preceivable by the ear; it is of 22 kinds; also every distinct audible sound is a sruti; it is a sruti because it is to be heard by the ear."

Doubts however exist as to whether the intervals of the srutis were equal or not.

In the arrangement of the sruties, modern usage is diametrically opposite to the classical one; the latter placing them before the note to which they respectively belong, while the former gives position after the notes. It is difficult to determine when or by whom the alteration was effected. The arrangement of the frets of the Vina and other stringed instruments accord with the modern acceptation of the principle. Accordingly to the rule laid down in the classical treatises, the disposition of the notes is reversed in the case of the Drave instruments and out of this reversed arrangement perhaps the modern theory about the arrangement of the position of all sruties has been worked. (Tagore)".

"சுருதியென்பது யாது என்று நுட்பமாய்ச்சொல்லுவது கஷ்டமானாலும், சங்கீதரத்னாவளியில், நம்முடைய காதால்கேட்கக்கூடிய அதிநுட்பமான இடைவெளிகளுக்கு சப்தந்தான் அது என்றும், அது 22-வகைப்பட்டதென்றும் காதினால்கேட்டறியக்கூடிய ஒவ்வொரு தனித்தனியான இடைவெளிக்கும் அந்தப் பெயரென்றும் காதினால்கேட்கப்படுவதினால் அதற்குச் சுருதியென்ற பெயரென்றும் சொல்லியிருக்கிறது.

ஆனால் சுரங்களுக்கு இடையில்வரும் இடைவெளிகள் (intervals) யாவும் ஒரே அளவுடையனவோ என்பதைப்பற்றி மாத்திரம் சந்தேகமுண்டு.

சுருதிகளை அமைக்கும் ஒழுங்கில், தற்காலமுறைக்கும் ஆதிமுறைக்கும் நேர்விரோதமிருக்கிறது. சுருதிகள் வரும்இடமானது ஆதிமுறைப்படி சுருதிக்குமுந்தியும் தற்காலமுறைப்படி சுருதிக்குப்பிந்தியுமாயிருக்கிறது. இந்தமாறுதல் எப்போது உண்டானதென்றும் யாரால் உண்டானதென்றும் தெரிவது பிரயாசையாயிருக்கிறது. ஆனால் வீணைமெட்டுகள் வைக்கப்படும்விதத்தையும் மற்ற தந்திவாத்தியங்களையும் கவனித்தால் அவை தற்காலம் ஒப்புக்கொள்ளப்பட்ட முறைப்படியே இருக்கின்றன.

தாருவாத்தியங்களில் ஆதிமுறைக்கு விரோதமாகவே மெட்டுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒருவேளை இப்படி மாறான முறையிலிருந்தே தற்கால சுருதிகளுடைய ஸ்தானம் குறிக்கப்பட்டதாயிருக்கலாம்."

மேற்கண்ட வாக்கியங்களைகவனிக்கையில் சங்கீதரத்னாகரர் அதிநுட்பமான இடைவெளிகளுள்ள 22 சுருதிகள் வருகிறதாகச் சொல்லுகிறார் என்று எழுதினார். ஆனால் சுரங்களுக்கு இடையில் வரும் இடைவெளிகள் ஒரே அளவுடையனவா என்று சந்தேகிக்கிறார். ஆதிமுறைக்கும் தற்கால முறைக்கும் பேதமிருப்பதைக்கொண்டே இப்படிச் சந்தேகிக்கிறார். ஆனால், வீணைமெட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் விதத்தைக் கவனித்தால் தற்காலம் ஒப்புக்கொள்ளக்கூடிய முறைப்படியேயிருக்கிறதென்று சொல்லுகிறார். அதாவது, தென்னிந்திய சங்கீதத்திற்கு ஒத்ததாக விருக்கிறதென்று நாம் நினைக்கவேண்டும். தாரு வாத்தியங்களில் ஆதிமுறைக்கு விரோதமாக மெட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார். இவ்விஷயத்தில் தேசிகமான இந்துஸ்தானி பழகியபின் அதற்குத்தகுந்தபடியே வாத்தியங்களில் சுரஸ்தானங்களும் நழுவலாயிருக்கவேண்டியது அவசியந்தானே. இந்தத்தேசத்திற்கு தகுந்த நூல் சங்கீதரத்னாகரமென்று அநேகர் அபிப்பிராயப்படுகிறார்கள். சங்கீத ரத்னாகரருடைய முறைப்படி பார்த்தால் இந்துஸ்தான் கீதத்திற்கு முழுதும் ஒத்திருக்கமாட்டாதென்று அறிவார்கள். இந்துஸ்தான் சங்கீதமுறையையே எழுத வந்த Mr. Clements, Mr. Deval முதலியவர்களின் சுருதி நிர்ணயம் சாரங்கதேவர் அபிப்பிராயப்படி அல்ல என்பதை இதன் பின் பார்ப்போம். ஏனென்றால், இடைவெளிகள் ஒரே