முதலில் ம(1) வந்தால் ஹார்மநிஉண்டு, ஏனென்றால் :- 5/4 வூ 16/15 = 4/3 க(3) வூ 16/15 = ம(1). அதாவது க(3) வைச் சுருதியாய் வைத்துக்கொண்டால் ம(1) என்பது சுத்தரிஷபமாகிறது. ப வுக்கும் க(3) வுக்கும் இடைவெளி 9/8. 4/3 வூ 9/8 = 3/2 ம(1) வூ 9/8 = ப. அதாவது ம(1) வைச் சுருதியாய் வைத்துக்கொண்டால் ப என்பது அதற்கு ரி(4) ஆய்ப் பேசும். பிறகு, ம(3) வும் இந்த இரண்டு ஸ்வரங்களுக்கும் இடையில் வந்தால் நன்றாய்ச்சேரும். ம(3) வுக்கும் ம(1) வுக்கும் இடைவெளி 9/8. 5/4 வூ 9/8 = 45/32 க(3) வூ 9/8 = ம(3). பவுக்கும் ம(3) வுக்கும் இடைவெளி 16/15. இதற்குக் காரணம் :- 45/32 வூ 16/15 = 3/2 ம(3) வூ 16/15 = ப. இந்த இடைவெளிகள் மேலே எழுதியிருக்கிற இடைவெளிகளில் அடங்கியவை. ஆகவே க(3) ம(1) ப க(3) ம(3) ப இந்த இரண்டு ஸ்வரத்தொகுதிகளும் சேர்ந்துவந்தால் சுகத்தைத்தரும். II. ஸ, க(3), ப, ஸ1 என்னும் ஸ்வரங்கள் சேர்ந்து வந்தால் எப்படி ஹார்மநி உண்டாகிறதோ அதைப்போல் ஸ, க(2), ப, ஸ1 ஆகிய இவைகள் நாலும் சேர்ந்து வந்தாலும் ஹார்மநி இருந்து சுகம் உண்டாகிறது. இந்த ஸ்வரத்தொகுதிக்கு மைனர் கார்ட் (Minor chord) என்று ஐரோப்பிய ஸங்கீத வித்வான்கள் பெயரிட்டிருக்கிறார்கள். மேலே கார்ட் ஆவ் நேச்சர் விஷயமாய்க் கணக்கிட்டுப் பார்த்ததுபோல் கணக்கிட்டுப்பார்த்தால், ஸ வுக்கும் க(2) வுக்கும், க(2) வுக்கும் ப வுக்கும் இடையில் எந்தெந்த ஸ்வரங்கள் சேர்ந்து வந்தால் ஹார்மநியைத் தரும் என்று பார்ப்போம். முதலில் ஸ வையும் க(2) வையும் எடுத்துக்கொண்டால், ரி(2) என்பது இந்த இரண்டு ஸ்வரங்களுக்கும் இடையில் சேர்ந்துவரும். ரி(2) வுக்கும் ஸ வுக்கும் இடைவெளி 16/15. க(2) வுக்கும் ரி(2) வுக்கும் இடைவெளி 9/8. இதற்கு காரணம் :- 16/15 வூ 9/8 = 6/5 ரி(2) வூ 9/8 = க(2). ரி(4) என்னும் ஸ்வரமும் இவைகளுக்கு இடையில் சேர்ந்து வரலாம். ஏனெனில் ரி(4) வுக்கும் ஸ இடைவெளி 9/8. க(2) வுக்கும் ரி(2) வுக்கும் இடைவெளி 16/15. இதற்கு காரணம் :- 9/8 வூ 16/15 = 6/5 ரி(4) வூ 16/15 = க(2). ஆகவே ; ஸரி(2) க(1) ஸரி(4) க(2).
|