இருக்கின்றனவென்று கண்டோம். வேறு சுருதிகள் இருந்தால் ஹார்மநி தராதவைகளாய்த்தான் இருக்கவேண்டுமென்றும் தெரிகிறது. இவையே நமது சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் 22 சுருதிகளாயிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இந்த 22 சுருதிகளும் ஒரு ஸ்தாயியில் இருக்கிறதாகத் தெரிந்தாலும், இந்தச் சுருதிகளெல்லாம் அநுக்கிரமமாய் ஒருபோதும் ஒரே ராகத்தில் பாடப்படுகிறதில்லை. இதற்குக்காரணம் : மெலடி உண்டாகவேண்டுமென்றால் சில ஸ்வரங்கள்தான் சேர்ந்து உண்டாகிறதென்றும். சில ஸ்வரங்கள் சேர்ந்து வந்தால் உண்டாகிய தில்லையென்றும் நாம் பார்த்தோமல்லவா? அதுதான். மேலும், ஸ வுக்கும் க(3) வுக்கும் இடையில் ஒரு ஸ்வரம் தான் வரும். அதேமாதரி க(3) வுக்கும் ப வுக்கும் இடையில் ஒரு ஸ்வரம் தான் வரும். எப்படி ஸ வுக்கும் ம வுக்கும் இடையில் இரண்டு ஸ்வரங்கள் வருகின்றனவோ, அதேமாதரி ப வுக்கும் ஸ1 வுக்கும் இடையில் இரண்டு ஸ்வரங்கள் தான் வருகின்றன. அதாவது மொத்தமாய், ஸ ஒன்று, ஸ வுக்கும் க வுக்கும் இடையில் ஒன்று, க ஒன்று, க வுக்கும் பவுக்கும் இடையில் ஒன்று, ப ஒன்று, ப வுக்கும் ஸ1 வுக்கும் இடையில் இரண்டு ஸ்வரங்கள், ஆக மொத்தம் 7 ஸ்வரங்கள் சேர்ந்து வந்தால் மெலடி உண்டாகும். இப்படிச் சேர்ந்து வரும் ஸ்வரத்தொகுதிக்கு ராகம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது 7-ஸ்வரங்களாலானதால் இதற்கு ஸப்தகம் என்று பெயரிடுகிறார்கள். இந்த 7-ஸ்வரத்திற்குள் நடுவில் இருப்பதற்கு மத்யமம் என்றும், ஐந்தாவதாற் வருவதற்குப் பஞ்சமம் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள். பின்னும், ஷட்ஜக்கிராமம், மத்யமக்கிராமம், காந்தாரக்கிராமம் என்னும் பரிபாஷைகள் வருகின்றன. ஆனால் அவைகளின் அர்த்தம் நன்றாய் வெளியிடப்படவில்லை. அவைகளுக்குப் பின்வரும் அர்த்தம் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். (1) ஷட்ஜக்கிராமம், ஜட்ஜத்தில் ஆரம்பித்து ஷட்ஜம் 4சுருதியுள்ளதாயும், ரிஷபம் 3 சுருதியுள்ளதாயும், காந்தாரம் 2 சுருதியுள்ளதாயும், மத்யமம் 4 சுருதியுள்ளதாயும், பஞ்சமம் 4 சுருதியுள்ளதாயும், தைவதம் 3 சுருதியுள்ளதாயும், நிஷாதம் 2 சுருதியுள்ளதாயும் இருக்கவேண்டுமென்றும், ஷட்ஜமத்தில் ஆரம்பிக்கவேண்டுமென்றும் சொல்லியிருக்கிறது. அந்த விதிப்படி பார்த்தால், ஸ, ரி(3), க(1), ம(1). ப, த(3), நி(1), ஸ1 , என்கிற ஸப்தகம் தான் ஷட்ஜக்கிராம ஸ்வரங்களாகிறது. இந்த மேளராகம் சற்று ஏறக்குறைய முகாரி ராகத்தில் வரும் ஸ்வரங்களுள்ளதாகிறது. ஆனால் முகாரியில் சிலசில சமயத்தில் வரும் த(2) என்னம் ஸ்வரம் அலங்காரர்த்தமாய் வருகிறதென்று நாம் நினைக்கவேண்டும். (2) மத்திமக்கிராமம் : இதற்கு லக்ஷணம் மத்தியம ஸவரத்தில் ஆரம்பிப்பது ; அதாவது மத்யமத்தை ஷட்ஜமாக வைத்துக்கொண்டு வேறு ஸ்வரங்களை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும் இந்தக் கிராமத்தில் பஞ்சமத்துக்கு 3 சுருதியும் தைவதத்துக்கு 4 சுருதியும் என்று சொல்லியிருக்கிறது. ஆகவே, ம(2), ப, த(2), நி(2) ஸ, ரி(4), க(2), ம(2). என்கிற ஸப்தகமாகிறது. இந்த ஸப்தகத்தில், த(2), ம(2) வோடு சேர்ந்துவர இடமில்லை. ஆகையால், த(2) வை விட்டுவிட வேண்டியது. அப்போது இந்த ஸ்வரங்களெல்லாம் மத்யமாவதிஸ்ரீ ராகம் முதலியவைகளில் வரும் ஸ்வரங்களாகின்றன. (3) காந்தாரக்கிராமம் : இந்தக் கிராமத்தில் ஷட்ஜத்துக்குமட்டும் 4 சுருதியென்றும் இதர ஸ்வரங்களெல்லாவற்றிற்கும் மூன்று சுருதிகளென்றும் சொல்லியிருக்கிறது. ஆகவே, க(2), ம(1), ம(4), த(2),
|