பக்கம் எண் :

49

73.

ஆளத்தி - இராகம் ஆலாபித்தல். இது காட்டாளத்தி, நிறவாளத்திபண்ணாளத்தி என மூன்றாம்.

74.

ஆளத்தியின் எழுத்து - மவ்வும், நவ்வும், தவ்வும், ஐந்து நெடிலும்ஐந்து குறிலும்.

75.

குயிலுவக்கருவி - சங்கீதத்திற்குதவும் யாழ், குழல், தண்ணுமைமுதலிய வாத்தியங்கள்.

76

யாழ் - யாளி என்னும் மிருகத்தின் முகம்போலச் செய்தமைத்தகோட்டினையுடைய நரம்புக் கருவி. தற்காலம் வீணையென்று வழங்குகிறார்கள்.

77.

யாழுறுப்புகள் - தோடு, மாடகம், நரம்பு, பத்தர், ஆணி.

78.

கோடு - யாழின் தண்டி

79.

மாடகம் - முறுக்காணி.

80.

நரம்பு - தந்தி, தந்திரி, யாழ்நரம்பு.

81.

பத்தர் - குடம்.

82.

திவவு - நரம்புகளை வலிபெறக்கட்டும் வார்க்கட்டு. தற்காலம்இதை நாக பாசம் என்பர். இது சுரபத் என்னும் வாத்தியத்தில் நாளதுவரையும் கட்டிவரப்படுகிறது.

83.

ஒற்று - நரம்பினும் பத்திரினும் தாக்குவதோர் கருவி.வீணையின் பக்கத்திலிருக்கும் மூன்று நரம்புகள் தங்குமிடம். இதை வளைவு ரேக்கு என்று தற்காலம் வழங்குகிறார்கள்.

84.

தந்திரிகரம் - இசை பிறக்க வைக்கும் மெட்டுகள்.

85.

ஆணி - ஒற்றுகள் அல்லது பக்கசாரணைகள் ஆரம்பிக்கும்இடத்தில் அந்நரம்புகளைத் தாங்கும் சிறு குமிள். இதைப் பொகடி என்று தற்காலம் வழங்குகிறார்கள்.

86.

யாழ்வகை - பேரியாழ், மகர யாழ், ஈகோட யாழ், செங்கோட்டு யாழ்,நாரத யாழ், தும்புரு யாழ், கீசக யாழ், மருத்துவ யாழ். மற்றும் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகம் 587ஆம் பக்கத்தில்காண்க.

87.

பேரியாழ் - இருபத்தொரு நரம்புகொண்டது.

88.

மகரயாழ் - பதினேழு நரம்புடையது

89.

சகோடயாழ் - பதினாலு நரம்பு பெற்றது.

90.

செங்கோட்டியாழ் - செம்மரத்தினால் செய்யப்பட்ட யாழ்.இதற்கு இசை மீட்டும் நரம்புகள் நாலும் தாளம் மீட்டும் நரம்புகள் மூன்றுமாக ஏழு நரம்புண்டு.

91.

நாரதயாழ் - ஆயிரம் தந்திகள் அமைந்தது. மற்றும் விவரம்கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகம் 588ஆம் பக்கத்தில் காண்க.