பக்கம் எண் :

661
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

தொடுத்து" என்றும் "குரல் நரம்பு இரட்டிக்க வரும் அரும்பாலையும் இளி நரம்பு இரட்டிக்க வரும் செம்பாலையும் இசைநூல் வழக்காலே இணை நரம்பு தொடுத்துப்பாடும் அளிவினையுடையனாகி" என்றும் அங்கங்கே சொல்வதைக் காண்போம்.

3. கிளைச் சுரம் இன்னதென்பது.

ஒரு ஸ்தாயியில் சொல்லப்படும் ஏழு சுரங்களும் ச-ப வாக வரவேண்டுமென்று இது வரையும் பார்த்திருக்கிறோம். அதுபோலவே ச முதல் ப வரையுமுள்ளடங்கிய சுரங்கள் இன்னின்ன கிரமத்தில் வரவேண்டுமென்று சொல்லுகிறார். ச-ப என்ற இணை நரம்புக்கு நடுவிலுள்ள சுரங்கள் ஒன்றோடொன்று பொருந்திவரவேண்டுமென்பதற்கு விதிசொல்லுகிறார். முன் ஒரு ஸ்தாயி ஒன்றானால் அதன் அடுத்த ஸ்தாயி இருமடங்காயிருக்கவேண்டுமென்று கணக்குச் சொன்னதுபோல ஒரு ஸ்தாயிக்குள் வரும் சுரங்கள் ச-ப முறையாய் அளக்கப்பட்டு அவ்வளவிற் கிடைக்கும் சுரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றற்கொன்று எப்படி ஒத்து நடக்க வேண்டுமென்று விளக்கிக் காட்டுகிறார். இவர் சொல்லும் கணக்குகள் ச-ப என்ற இணை நரம்பிற்கு உள்ளடங்கிய வையென்று நாம் கவனிக்கவேண்டும். ஒரு அடி நீளமுள்ள மட்டப்பலகையினால் அளந்து கொண்டுபோனபின் மீதியாய் அதற்குக் குறைந்ததை அடியிற் குறைந்ததாகிய அங்குலத்தால் கணக்கிடுவதுபோல இதையும் நினைக்கவேண்டும். ச-ப வாய்ப் பிரித்துக் கொண்டுபோன இராசி மண்டலத்தில் ஏழாவதேழாவதாக நின்ற ஏழு இராசிகளையும் அவைகளுள் இன்னின்ன இராசிகள் குரல் இளியோடு பொருந்தக்கூடியவையென்கிறார். ச-ப விற்கு நடுவிலுள்ள ஆறு இராசிகளில் இன்னின்ன இராசியில் நிற்கிற சுரங்கள் ஆரோகண முறையாகவும் அவரோகண முறையாகவும் பொருந்தி நிற்கும் என்பதே இதன் கருத்து. இப்படிப் பொருந்திநிற்கும் இராசிகளும் அவற்றில் நிற்கும் சுரங்கள் இன்னின்னவையென்று இதன் பின் பார்ப்போம்.

கிளை யென்பதற்கு உறவு, மரக்கிளை, கிளைத்தவை, சுற்றம் என்று பொருளாம். இக்கருத்திற்கிணங்க துவக்கிய சுரமாகிய குரலுக்கு இளியின் பொருத்தத்தைப்போலச்சற்றுக் குறைந்து சேர்ந்து நிற்கக்கூடிய சுரத்தையே கிளை யென்றார். குரல் முதல் இளி வரையுமுள்ள ஏழு இராசியில் எந்த இராசியிலுள்ள சுரம் எடுத்த குரலுக்கு ஒத்து நிற்குமோ அதையே கிளையென்றார். இக்கிளை இணைச் சுரத்திற்குரிய ஏழு இராசிக்குள்ளாகவே எப்போதும் நிற்கும். ஆரம்பிக்கும் சுரத்தினின்று ஐந்தாவதைந்தாவது இராசியில் நிற்கும் சுரம் கிளை நரம்பென்று தோன்றுகின்றது. இது குரலுக்கு உழையாகிறது (ச-ம).

திருஷ்டாந்தமாக - முன் சக்கரத்தைப் பார்க்க.

இடப ராசியினின்று ஐந்தாம் இராசியாகிய துலாம் அதற்குக் கிளையாம். அதாவது ச-ம வாம்.

அது போலவே, துலாத்தின்மேல் ஐந்தாம் இராசி கிளையாம்; அதாவது ச-ம வாம்.

தனுசின்மேல் ஐந்தாம் இராசி இடபம் அதற்குக் கிளையாம்; அதாவது ப-ச அல்லது ச-ம வாம். இப்படியே தொட்ட இராசிக்கு ஐந்தாம் ஐந்தாம் இராசிகளில் நிற்கும் சுரங்கள் தொட்டராசியில் நின்ற சுரங்களுக்குக்கிளையாம்.