பக்கம் எண் :

785
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

அவற்றிற்குத்தலையாய் இருபத்தைந்தாவது தத்துவமாய் நின்ற அந்தக்கரணத்தையும் அதில் அடங்கிய அறிவு அறியாமையையும், இச்சூக்கும சரீரத்தின் தலையாய் விளங்கும் அறிவிலிருந்து காரண சாரீரத்தின் இருபத்தைந்து தத்துவங்களையும் அவற்றின் கலையாய் இருபத்தைந்தாவது தத்துவமாய் விளங்கும் அறிவில் அறிவாகிய பிரம்மத்தையும் அறியக் கண்ணுங் கருத்துமாயிருந்தார்கள் என்று அவர்கள் எழுதிய நூல்களினால் தெளிவாய்த்தெரிகிறது.

அண்டத்தின் பஞ்சீகரணச்செயலால் கிடைத்தது அன்னம். அது அண்டத்தின் முதல் தத்துவமாகிய பிருதிவியினின்றே உண்டானது. அதன்மேல் அன்னத்தில் நின்றுண்டான தூல சரீரத்தின் முடிந்த இருபத்தைந்தாவது தத்துவம் மோகமாம். இச்சியைனின்று சூக்கும சரீரத்தின் இருபத்தைந்து தத்துவங்களும் உண்டாகின்றன. அதில் சூக்கும சரீரத்தின் பிருதிவியின் அம்சமாகிய ஜனனேந்திரிய ஸ்தானமே முதல் தத்துவமாம்.

அந்தக்கரணமே இருபத்தைந்தாவது தத்துவமாம். அந்தக்கரணத்தை ஆதாரமாய் வைத்துக்கொண்டு பிறந்த காரணசரீரத்திற்கு முதல் தத்துவம் பிரம்மாவாம். இது பிருதிவியின் அம்சம். இப்படியே பஞ்சகர்த்தாக்களும் பஞ்ச சக்திகளும் கலந்து பஞ்சீகரணப்படி உண்டான இருபத்தைந்து தத்துவங்களுள் இருபத்தைந்தாவதானதத்துவம் பரபிரம்மமாம். இதையே அறிவில் அறிவென்றும் மௌனமென்றும் சூனியமென்றும் அகண்ட பரிபூரண மென்றும் சத்து சித்து ஆனந்தமென்றும் பெரியோர்கள் சொல்வார்கள்.

இப்படிக் காரண சரீரத்தின் இருபத்தைந்தாவது தத்துவமாகிய பிரம்மத்தின் சந்திதியில் சத்துவ, ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்கள் உண்டாயின. இம் முக்குணங்களும் பஞ்சபூதங்கள் பஞ்சீகரணப்படி கலந்து தனுகரணபுவனபோகங்களைக் கொடுக்கும் அண்ட பிண்ட சாராசரங்கள் யாவும் உண்டாயின. இப்படி உண்டானவைகளுள் மானுடத்தோற்றம் மேலானது.

இம்மேலான மனுடன் சூக்குமசரீரத்தின் தலையாக விளங்கும் அந்தக்கரணத்தில் அறிவு அறியாமையென்னும் இருகுணங்களில் ஏதாவது ஒன்றின்படி நடக்கிறவானாயிருக்கிறான். அறியாமையின் வழிப்பட்டால் அதாவது சரீரத்தின் பிரியப்படி நடந்தால் அவி வேகமும் அவிவிவேகத்தினால் அபிமானமும் அபிமானத்தால் எனது, எனக்கு என்ற இச்சையும், இச்சையினால் தீயகருமமும், கருமத்தால் சரீரமும், சரீரத்தால் சம்சாரபந்தமும் பந்தத்தால் நரகமுமடைகிறான். அது போலவே அறிவினால் விவேகமும் விவேகத்தால் பற்றின்மையும், நிராசையால் கர்மநாசமும், கர்மநாசத்தால் தூல நாசமும் நான் என்ற தூல நாசத்தால் (அஞ்ஞான நாசமும்) பந்த நிவிர்த்தையும் எந்த நிவிர்த்தையால் வீடு மடைகிறான்.

பிறப்பிற்குக் காரணமாகிய இச்சையே மேல் இரண்டு அண்டங்களுக்கும் கீழ் இரண்டு அண்டங்களுக்கும் மூல காரணமாயிருக்கிறது. இச்சையின் வசபபட்ட சீவன் அறியாமை மேற்கொண்டு சூக்கும சரீரத்தின் நற்செயல்களையும் மேன்மையையுமிழந்து, “நீ மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்” என்ற தேவாக்கின்படி நரகப்பிராப்தியடைகிறான்.

ஆனால் தூல சரீரத்தின் இருபத்தைந்தாவது தத்துவமாகிய இச்சையையழித்து சூக்கும் சரீரத்தின் இருபத்தைந்தாவது தத்துவமாகிய அறிவின்படி நடக்கிறவன் சூக்கும சரீரத்தின் மேன்மையை யறிந்து அதை வசப்படுத்திக் கொண்டு காரணசரீரத்துப் பஞ்சகீரணப்